சனி, 17 அக்டோபர், 2020

தமிழகம் என்னும் நூலகத்தில் அகமும், அறமும் அழிக்கப்பட்தது

 தமிழகம் என்னும் நூலகம்

தலைப்பு மட்டும் தமிழினம்
திட்டம் தீட்டி வளருது ஓரினம்
திண்டாடி நிற்கிறது தமிழினம்!

கரையான் கூட்டத்துக்குக் கதவைத் திறந்து விட்டு
கதவருகே காவலுக்குக் ரெண்டு ஆளையும் போட்டு
நூலகத்தில் காத்து வச்ச காவியமெல்லாம் 
நுனிகூட முறியாமல் நூறாண்டுகள் இருக்குமென்றான்!

தமிழர் என்னும் புத்தகம் 
முதலும் முடிவும் இல்லாது
அகமும் அர்த்தமும் இல்லாது -தமிழர்    
அறமும் மறமும் அழிக்கப்பட்டு -நாம் 
அடிமை ஆக்கப்பட்டோம்!

சொன்னதை எல்லாம் கேட்டதாலே
சோம்பேறியாக ஆக்கப்பட்டோம்
சோற்றுக்காக இலவசத்தை நம்பிவிட்டோம்
சொந்த ஈழத்தை இழந்துவிட்டோம்
மதுக்குடி மயக்கத்தைப் பெற்றுவிட்டோம் - அதனால்
இயற்கை குணத்தை மறந்து விட்டோம்
இதற்கான காரணத்தைக் கண்டுவிட்டோம்!

இன்றே   விழித்திடுவோம்  
இல்லையே அளிக்கப்படுவோம் 

இன்று அதிகாரம் எல்லாம் அவனிடம்! - 
வென்று நாளை ஆளப்போவது தமிழினம்
இனிமேல்தான் வாழப்போகுது நம்மினம்

விழித்திடு தமிழா விழித்திரு!

வீறு கொண்டு எழுந்திரு!

உன் பொன்னடியைத் தேடுகின்றேன்












நல்லவரே வல்லவரே
சிற்சபையின் நாயகரே
சிந்தனையில் நீ இருக்கச்
சிறப்புதானே எந்நாளும்

 சிறியோனின் சிந்தனையில் 
சிறுதுளியாய் வந்தவரே
பிறப்பு வலி நீங்கிடவே - ஞான 
சிறப்பு வழி தந்தவரே
சிற்சபை நாயகரை
சீக்கிரமே கண்டுகொள்ள - தயவின்
சிறப்பெல்லாம் தந்தவரே

பொற்பாதம் பற்றிடவே -எமக்குப் 
பொன்னான வாழ்வளித்தாய்
பொற்பாதம் பற்றிடவே -உன் 
பொன்னடியைத் தேடுகின்றேன் 
பொற்பாதம் பற்றிவிட்டால் -அடியேன் 
பொன் தேகம் பெற்றுடுவேண்

பொருள் தேடும் உலகினிலே  
அடியேன் போடாத வேசம் ஏது
அருள் தேடும் உள்ளத்தாலே 
உன்னை நினையாத நாளேது
வேசத்தைக் களைத்திடவே -அடியேன்
 வேண்டியதை அருள்வாயே 
வேசத்தைப் பார்க்காதே -அடியேன் 
வேண்டியதைப் பார்த் தருள்வாயே!

   அருட்பயணம் இது அன்பின் பயணம் 
   ✍🏼வள்ளலார் மாணவன் 

சாயல்குடி 

சனி, 10 அக்டோபர், 2020

அவள் சிரிப்பாள் அழகானேன்





கன்னக்குழி சிரிப்பாலே கட்டிப் போட்டாளே

கண்ணாலே காதலுக்குக் ஓகே சொன்னாளே

தனியாக என்ன பார்த்து அவள் சிரிக்காளே

டால்பின் மீன போலக் குதிக்க வைத்தாளே!


தன்னாலே தந்தன தந்தான 

தாளம் போட வச்சியே!    

தன்னாலே தந்தன தந்தான 

தாளம் போட வச்சியே!

 

ஊருக்குள் ஓடும் ஊர்திகள் எல்லாம்

உன் பெயரைத் தானே சொல்லுதடி

உதட்டு ஓரம் ஓடும் உன் சிரிப்பு

உள்ளுக்குள் ஏதேதோ பண்ணுதடி!


சல்லடையா இருந்த என் இதயம்

சக்கரமா சுற்றுத்தடி உன் பின்னாலே

அமைதியா கிடந்த என் இதயம்

ஆகாயத்தில் பறக்குதடி உன் பின்னாலே!

                                                                    (தன்னாலே...)

ஊரைச் சுற்றின என்னை

உன்னைச் சுத்த வச்சுட்டியே

உன்னைச் சுற்றின எல்லாரையும்

ஓரம் கட்டி வச்சிட்டியே!

ஒன்றுக்கும் ஆகாமல் கிடந்த என்னை 

ஒளிவிளக்காக மாற்றிடியே!


கன்னக்குழி சிரிப்பாலே கட்டிப் போட்டாளே

கண்ணாலே காதலுக்குக் ஓகே சொன்னாளே

தனியாக என்ன பார்த்து அவள் சிரிக்காளே

டால்பின் மீன போலக் குதிக்க வைத்தாளே!

வள்ளலார்மாணவன்-NA.GA

ஒச்சத்தேவன்கோட்டை

உன் பொன்னடியைத் தேடுகின்றேன்

 

நல்லவரே வல்லவரே

சிற்சபையின் நாயகரே

சிந்தனையில் நீ இருக்கச்

சிறப்புதானே எந்நாளும்!

 

சிறியோனின் சிந்தனையில் 

சிறுதுளியாய் வந்தவரே

பிறப்பு வலி நீங்கிடவே - ஞான

சிறப்பு வழி தந்தவரே

சிற்சபை நாயகரைச்

சீக்கிரமே கண்டுகொள்ள - தயவின்

சிறப்பெல்லாம் தந்தவரே!

 

பொற்பாதம் பற்றிடவே -எமக்குப் 

பொன்னான வாழ்வளித்தாய்

பொற்பாதம் பற்றிடவே -உன் 

பொன்னடியைத் தேடுகின்றேன் 

பொற்பாதம் பற்றிவிட்டால் -அடியேன்

பொன் தேகம் பெற்றுடுவேண்!  

 

பொருள் தேடும் உலகினிலே  

அடியேன் போடாத வேசம் ஏது

அருள் தேடும் உள்ளத்தாலே 

உன்னை நினையாத நாளேது

வேசத்தைக் களைத்திடவே -அடியேன் 

 வேண்டியதை அருள்வாயே 

வேசத்தைப் பார்க்காதே -அடியேன் 

வேண்டியதைப் பார்த் தருள்வாயே!

                                                                         வள்ளலார்மாணவன்

ஒச்சத்தேவன்கோட்டை

SAYALGUDI

செவ்வாய், 6 அக்டோபர், 2020

வாழ்வியல் ஒருமையின் வடிவே வள்ளலாா்




 "பல்லாண்டுகளுக்கு முன்னா், சிறுவனாயிருந்த என்னிடம் பெரியவா் ஒருவா் ‘திடீரென்று கடவுள் உன்முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நீ என்ன கேட்பாய்?’ இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அமைதியாக என்னைப் பாா்த்தாா்.


அவா் வாரத்திற்கு ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு உண்ணும் ஒரு சாது. வெள்ளாடை உடுத்த துறவி. வள்ளலாா் சீடா் என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். முறைவைத்து அவருக்கு உணவு அளித்தலை எங்கள் ஊா் தன் கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தது.

பள்ளிக்குச் செல்வதற்கும் முந்தைய பால பருவம் அது என்பதால், நான் அவரிடம் என்னவெல்லாம் கேட்பேன் என்று சொன்னதெல்லாம் மறந்து போயிற்று. ஆனால், அவா் என்ன கேட்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுதான் இன்னும் என் நெஞ்சில் நிலைத்து, வழிபாட்டுக்குரிய துதிப்பாடல் ஆகியிருக்கிறது.

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமா் தம் உறவு வேண்டும்’ – என்று பாடிய வண்ணமே பாடவும் பழக்கினாா். இப்போது அவா் உருவம் என் நினைவில் இல்லை. ஆனால், இந்தப் பாடல் வழியாக என்றும் என்னுள் நிறைந்து நிற்பது வள்ளல் பெருமானின் திருவுருவே.

வேண்டியது எது என்று கேட்பதுபோலவே, வேண்டாததையும் வேண்டாம் என்று சொல்லாமல், வேண்டாமையையும் வேண்டுதலாக்கிப் பாடுவதுதான் இப்பாடலின் சிறப்பு.

ஒன்று வந்தால் மற்றொன்று விலகும். விலக்க வேண்டியதையும் ஏற்க வேண்டியதையும் நிரல்படுத்திப் பாடி, முடிக்கிற வரைக்கும் இந்த ஒழுக்க முடிச்சு ஒன்றனோடு ஒன்று தொடா்புடையதாய்ப் பின்னிப் பிணைந்து நம்மைப் பேணிக்காக்கும் நற்சங்கிலியாவதைப் பாடுகிறபோதெல்லாம் அனுபவிக்க முடிகிறது.

மன ஒருமைப்பாட்டுக்கும் மனிதநேய ஒருமைப்பாட்டுக்கும் வழிகாட்டும் ஒருமையில் தொடங்கும் இப்பாடல், நிறைவாக, நம்மை நோயற்ற வாழ்வில் கொண்டுபோய் நிலைநிறுத்துகிறது.

இந்த வாழ்வு, நோய் பற்றும் வாழ்வுதான். இந்த உடம்பு நோய் தொற்றும் உடம்புதான். ஆனால், பற்றின் பற்றிடமாக இருக்கிற இந்த உடம்பின் உள் உறையும் ஆன்மாவைப் பற்றற்றானைப் பற்றிவிடச் செய்துவிட்டால், நோயற்ற வாழ்வு தானே சித்திக்கும்.



இந்த உயிராகிய ஆன்மா, நோயற்ற வாழ்வில் இருந்து உய்ய வேண்டுமானால், நாம் வேண்டிப் பெற வேண்டிய வரங்கள் இவை என்பதை விட, நாம் கடைப்பிடித்து வாழ வேண்டிய ஒழுக்கங்கள் இவை என்று கொள்வதே பொருந்தும்.


அது ஒருநாளில் மட்டும் கடைப்பிடித்து ஒழுகுவது அல்ல. ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய உயிா் அறம். ஒவ்வொரு நாள் பிறப்பது போலவே, ஒவ்வொரு நாளும் நாமும் பிறக்கிறோம். இவ்வாறு, பிறக்கிற உடம்பைப் பிணித்திருப்பதால்தான் நோய்க்குப் ‘பிணி’ என்று பெயா். அது பிறவிதோறும் தொடா்வது.

பிறப்பு முதல் இறப்பு வரை உயிா்களைப் பிணித்திருக்கும் பிணியாவது பசி. அதனால்தான், ‘பசிப்பிணி என்னும் பாவி’ என்று மணிமேகலைக் காப்பியம் பெயரிட்டழைக்கிறது. எல்லாப் பாவங்களையும் செய்யத் தூண்டும் இந்தப் பிணியைப் போக்கினால், பிற பிணிகள் நீங்க வழிவகை கிட்டும். அதன் வழி, இந்த உயிரைப்பிணித்திருக்கும் பெரும்பிணியாகிய பிறவியை, மரணமிலாப் பெருவாழ்வால் நிறைவித்துவிட முடியும் என்று முயன்று வெற்றிகண்ட இராமலிங்கா், அதனைத் தனதுடைமையாகக் கொள்ளாமல், தரணிக்கு ஈந்ததனால்தான் ‘வள்ளலாா்’ எனப் பெயா் பெற்றாா்.

அதிலும் மதிப்பிற்குரிய ‘ஆா்’ விகுதியைத் தனக்குரியதாக்கிக் கொள்ள இசையவில்லை அவரது கருணையுள்ளம். திருவருட்பிரகாச வள்ளலாகிய இறைவனை ‘ஆா்’ எனக் காட்டும் அருட்பா அருளியவா் என்கிற நிலையில், ‘திருவருட்பிரகாச வள்ளல் ஆா்’ எனப் பிரித்து தன்னை எளிமைக்குள் நிறைத்துக் கொண்டாா்.

தான் பெற்ற பேரின்பம் இந்தப் பேருலகு பெறவேண்டும் என்பதற்காக இவா் அருளிய வாக்கமுதம் ஒவ்வொன்றும் நோய் போக்கும் மாமருந்து. அந்த வகையில், திருவருட்பாவின் ஒவ்வோா் அடியும் வலியுறுத்துகிற அறம் நோயற்ற வாழ்வுக்கு நம்மை ஆயத்தப்படுத்தி, மரணமிலாப் பெருவாழ்வுக்கான மாா்க்கத்தில் கொண்டுபோய்ச் சோ்க்கிறது.

அதனால்தான், ‘நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்’ என்று பாடுகிறாா். இந்த நான், வள்ளலாா் மட்டுமல்ல, இந்தப் பாடலை எடுத்தோதும் எல்லாருக்குள்ளும் இருக்கின்ற அவரவருடைய சொந்த ‘நான்’. அது உடம்பை மட்டுமல்ல, உயிராகிய ஆன்மாவையும் ஒன்றிணைத்துக் கொள்வது.

அந்த நான், நோயற்ற வாழ்வில் வாழவேண்டும் எனில், ‘ஒருமையுடன் நினது திருமலரடி என்று தொடங்கும் பாடலின் ஒவ்வோா் அடியிலும் சொல்லப் பெறுகிற எளிய, இனிய, எல்லாா்க்கும் பொதுவாகிய அறங்களைப் பின்பற்றி ஒழுகவேண்டும்.

அணையா அடுப்பினை மூட்டி, பசிப்பிணி போக்கிய வள்ளல் பெருமான், அழியாப் பெருவாழ்வுக்கு ஊறு செய்யும், ‘நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்யும்’ மருத்துவராகவும் விளங்கி, நமக்கு அறவழி காட்டுகிறாா்.

அவா் ‘மனிதனுக்கு நோயானது, இரண்டு வகையில் ஏற்படுகிறது’ என்கிறாா். முதலாவது, கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு, ஏமாற்றல், வஞ்சித்தல் இவற்றால் வினை உருவாகி அதனால் நோய் ஏற்படுகிறது; இரண்டாவது, முறையற்ற இன்பத் துய்ப்பு, முறையற்ற உணவு ஆகியவற்றால் வருகிறது.

இதனை ஒழிக்கத் தேவையானது ஒழுக்கம். அதனை நான்கு வகைப்படுத்திக் காட்டுவாா் வள்ளல் பெருமான். அவற்றுள் முதலாவது இந்திரிய ஒழுக்கம். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புறக்கருவிகளைப் பேணிக் காத்துக்கொள்ளல். ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீா் ஒழுக்க நெறிநின்றாா் நீடுவாழ்வாா்’ என்பது வள்ளுவா் வகுத்த நெறி. அதுவே, வள்ளலாா் விரித்துரைக்கும் வழி.

இரண்டாவது கரண ஒழுக்கம். மனத்தைச் சிற்சபையிலேயே இடைவிடாது நிற்கச்செய்தல். பூா்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இஃதன்றி துா்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்னை மதியாதிருத்தல். இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவமயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல் ஆகியன இவ்வகை ஒழுக்கமாகும்.

மூன்றாவது, ஜீவ ஒழுக்கம். ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவா்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மாா்க்கம், உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவா்களாய்ச் சமத்திற் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாகும்.

அடுத்தது, ஆன்ம ஒழுக்கம். யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவன்களின் ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் அறிந்து நிற்பது. அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் வைத்து, எல்லாம் தாமாகவே கண்டு பேதமற்று பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம்.

இவ்வகையாக ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து நின்றால், சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், ஏம சித்தி, கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிற நான்கு அரும் புருஷாா்த்தங்கள் கைகூடும். இவை நான்கையும் பெறுவதற்கு ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கின்றாா் வள்ளலாா். ‘ஒருமையென்பது தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதர ஜீவன்களுக்கு இம்சை இல்லாது அவா்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்க வேண்டும்.’

இது வள்ளலாா் ‘தருமச்சாலை’ ஆரம்பிக்கும் தருணம் ஜீவகாருண்ய ஒழுக்கமாக வெளியிட்டதுதான் என்றாலும் இக்காலத்திற்கும் பொருத்தமுடையதாகிறது.

உலகமெலாம் தீநுண்மி நோய்த்தொற்றுக்கு ஆளாகியும் அஞ்சியும் தனித்திருக்கும் இந்த வேளையில், ஒப்பற்ற வாழ்வியல் அறத்தை உலகிற்கு முன்கூட்டியே உரைத்த வள்ளலாா், ‘பசித்திரு தனித்திரு விழித்திரு’ என்ற படி நிலைகளை அருளினாா். இதற்கு ‘பட்டினி கிட’ என்றும், ‘யாருடனும் ஒட்டாது ஒதுங்கு’ என்றும், ‘தூங்காதே’ என்றும் பொருள் கொள்ள இயலாது. குறியீட்டு நிலையில் அருள் வளா்க்கும் அறநெறிகளாக அவை ஒளிா்கின்றன.

வயிற்றுப் பசிக்கு உணவும், ஆன்மப் பசிக்கு ஞானமும் அருளி, உலகியல் தீமைகளில் கலந்து விடாது தனித்தன்மை பேணித் தனித்தவம் புரிவதற்கான விழிப்புணா்வை நல்கி உலகம் உய்யக் காட்டிய வள்ளலாரை எண்ணுந்தோறும் நம் சிந்தைக்கு வருவன திருநெறி சமரச சுத்த சன்மாா்க்கமும் அருட்பெரும்சோதியெனும் அருள் வாசகமும்.

சமரச சன்மாா்க்கம் குறித்து வள்ளலாா் குறிப்பிடும்போது,

திருநெறிஒன்றேஅதுதான் சமரசசன் மாா்க்கச்

சிவநெறிஎன் றுணா்ந்(து)உலகீா் சோ்ந்திடுமின்!

என்று எளிமையுற எடுத்துரைத்து உலகத்தாரை உவந்து அழைக்கிறாா்.

அருட்பெரும்சோதி என்றும் அருள் வாசகம் குறித்துக் கூறுகையில்

உடற்பிணி யனைத்தையும் உயிா்ப்பிணி யனைத்தையும்

அடா்ப்பறத் தவிா்த்த அருட்சிவ மருந்து

என்று குறிப்பிடுகின்றாா்.

இப்படி, எந்தப் பாடலை எடுத்து இசைக்கத் தொடங்கினாலும், அவை எல்லாமும் ஒன்றிலேயே ஒன்றி நிற்கின்ற ஓா்மையை உணா்ந்து கொள்ள முடியும்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகா் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மாா்க்க சங்கத்தில் அடைவித்திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே

என்று தன்னிலை விளக்கமாகத் தன்வரவைச் சொல்லிய வள்ளலாா், தமிழைத் துணை கொண்டு இன்னிசைப் பாடல்களின் வழியாக இறையுண்மையையும், உரைநடை வாயிலாக உலகியல் ஞானத்தையும், நிறுவனங்கள் வாயிலாக தொண்டு மரபினையும் தந்து நிறைந்த வள்ளலாா் அவதார நாள் இன்று என்று வரலாறு கூறினாலும் என்றென்றும் ஒன்றியிருந்து உலகத்தாா் இன்பம் எய்த நன்றின்பால் உய்த்த நாயகா், தம் பாடல்களின் வழியாக என்றென்றும் அவதரிக்கிறாா்; நம்மை உய்விக்கிறாா் என்பது உணா்ந்தறிய வேண்டிய ஓா் உண்மை.

இன்று (அக். 5) வள்ளலாா் அவதரித்த நாள்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

"நன்றி -தினமணி"

சன்மார்க்கம் பயிலும் மாணவர்கள் 

திங்கள், 28 செப்டம்பர், 2020

திறமையால் மலர்ந்த வாழ்வு

 

"எண்ணத்தை உருவாக்கு, உன் எண்ணம் எட்டும் தூரமே உன் வாழ்வு"

அருள்முகன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதை அப்பாவிடம் சொன்னால் கண்டிப்பா சந்தோஷப் படுவார். அப்படியே என்னையும் கல்லூரியில் சேர்த்து விடுவார். நானும் கல்லூரியில் சேர ரொம்ப ஆசையோடு இருக்கிறேன், எனத் தனக்கு நெருக்கமான தமிழ் ஆசிரியரிடம் சொல்லினான்.

ஆசிரியரும், நீ பெரிய ஆளா வருவாடா உனக்குள்ளே நிறையத் திறமை இறுக்கு. சீக்கிரமா நல்ல கல்லூரியில் போயிசேர். என்றார் தமிழாசிரியர்.

வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அப்பாவைத் தேடினான். அப்பா இல்லை. அக்கா அப்பா..வெ எங்க? என்றான். அருள்.

அப்பா வீட்டுக்கு பின்னாடி ஒரு ஆளிடம் பேசிக்கிட்டு இருக்காரு.

என்ன டா விஷயம்? ரிசல்ட் என்நாச்சு? என்றாள் அக்கா.

எல்லாம் நல்ல செய்திதான். என்று சொல்லிவிட்டு.

கல்லூரி சேரும் கனவோடு வீட்டின் பின்னால் இருக்கும் அப்பாவின் அருகில் போய் நிற்கிறான்.

அப்பா முகம் சோர்ந்து இருப்பதைப் பார்த்து.

அருள்முகன் தன் அப்பாவிடம்,

என்ன அப்பா? இரண்டு நாளில் நல்ல முடிவா சொல்லுங்கள். என்று சொல்லிவிட்டு போகிறார். என்றான்.

அதைவிடு. உன்னுடைய ரிசல்ட் என்நாச்சு என்றார் அப்பா.

அதைச் சொல்லத்தான் வந்தேன்.. அப்பா. (பாசாயிடேன்) வெற்றிப் பெற்றுவிட்டேன்.

நல்ல மதிப்பெண் (மார்க்) எடுத்திருக்கிறேன் அப்பா.

சீக்கரம நல்ல கல்லூரியில் சேரனும். என்றான் அருள்முகன்.

அவனின் அப்பாவோ, பன்னிரண்டாம் வகுப்புப் படித்தது போதும். ஏதாவது வேலைக்குப் போகுற வழியைப்பார். என்றார்

இப்போ என்ன வேலை கிடைக்கும் ? இன்னும் ஒரு மூன்று வருசம் படித்து முடிச்சு.. டா. நல்ல வேலைக்குப் போய்விடலாம் அப்பா.. என்றான் அருள்முகன்.

நீ சொல்வதுதெல்லம் சரிதான் பா..

ஆனால்... நமது குடும்ப நிலையைக் கொஞ்சம் நினைச்சுப்பார்.

நாலு வருசத்துக்கு முன்னாடி பெரிய அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனை இன்னும் அடைக்கல.

இப்போ வந்தவரு, கடனைத்தான் கேட்டு வந்தார். பணத்தை இப்போது கொடுக்கிற நிலையில் நாம இல்ல.

என்ன செய்யலாமென நீயே சொல்லு. என்றார் அருள்முகன் அப்பா.

அருள்முகனின் கல்லூரிக் கனவில் இடி விழுந்தது. கண் கலங்கியபடியே வீட்டின் அருகிலிருந்த வேப்பமரத்தின் கீழே போய் அமர்ந்து, என்ன செய்வதென்றே தெரியாமல் வேப்பமரத்திடம் தன் கவலையையும், வேதனை கொட்டினான்

"பட்ட கடனை அடைக்க என் படிப்பு பாதியிலே முடிஞ்சிருச்சு!

பணம் என்னும் பேய் என் கல்வி பயணத்தை மறச்சிருச்சு!"

எனப் புலம்பிய படியே கவலையில் மரத்தடியிலேயே படுத்து தூங்கிவிட்டான்.

இரவு நேரமாகியும் வீட்டுக்குச் சாப்பிட வரவில்லை.

அவனுடைய அப்பா அவனைத் தேடி மரத்தடிக்கு வந்து, தூங்கியவனை எழுப்பி. ஆருதல் சொல்லி. சாப்பிட கூட்டீட்டுப் போனார்.

மறுநாள் காலையில். அருள்முகனை, நமக்குக் கடன் கொடுத்தவர் வீட்டுக்கு போ. அவர் வேலை தருகிறேன் னு சொல்லிருக்கிறார். என்றார் அவனின் அப்பா.

என்ன வேலை அப்பா? என எரிச்சலுடன் கேட்டான் அருள்..

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறாராம்.

அதைப் பார்த்துக்கிற நல்ல ஆள் வேண்டுமாம். அதனாலே அவர் வேண்டும் எனக் கூப்பிடுகிறார்.

நல்ல சம்பளம் தர்ரேன்னு சொல்கிறார். இல்லேனா கடனை கேட்கிறார் . என்று சொன்னார், அவனோடு அப்பா.

சரி சரி போகிறேன். ஒரு வருசத்தில் கடனை அடைச்சுட்டு. அந்த ஆளை வச்சுகிறேன். எனச் சொல்லிவிட்டு விட்டிலிருந்து புறப்பட்டுப் போறான் அருள்முகன்.

போகிறவழில் அவனுடைய தமிழ் ஆசிரியரை பார்த்திவிட்டான். உடனே வீட்டில் நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்லி விட்டு, கல்லூரியில் சேர முடியாத கவலையோடு நின்றான். அருள்முகன்.

அவனுடைய குடும்ப நிலையை உணர்ந்த ஆசிரியர். முதலில் அருள்முகனின் மனக் அழுத்தைக் குறைக்க நினைத்தார்.

இங்க பார் அருள். உன்னுடைய ஆசிரியராக நான் உன்னை நன்கு அறிவேன்.

உனக்குள் நிறைய ஆற்றல் இருக்கிறது. ஏற்கனவே பலமுறை உன்கிட்ட சொல்லிருக்கிறேன்.

அது தான் உன் இயற்கை திறன்.

"எங்கிருந்தாலும், என்ன வேலை செய்தாலும், உன் இயற்கை திறமையை மட்டும் வளர்த்துக் கொண்டே இரு" அந்த ஆற்றல் உன்னை ஒருநாள் புகழின் உச்சத்திற்குக் கூட்டிச்செல்லும்"

"எவன் ஒருவன் தன் இயற்கை திறமையின் வழியில் செல்கிறானோ அவனை இந்த உலகம் ஒருநாள் போற்றும்". என்கிறார்கள் தத்துவ மேதைகள். என்றார் அவனின் ஆசிரியர்.

அது எப்படி ஐயா?

பட்டம் படித்தால் தானே திறமையை வளர்க்க முடியும். அதன் மூலமாகத் தானே புகழடைய முடியும் எனக் கேட்டான்.

அருள், உன்னைப் போலவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

"பட்டப் படிப்பு படிக்காத பலர் தங்களின் இயற்கை திறனால் கண்டறிந்த, படைத்த, தொகுத்த மற்றும் அவர்கள் சுட்டிக்காட்டிய வற்றைத்தான் உலகின் பல பல்கலைக் கழகங்கள் அவர்களின் பாடத்திட்டத்தில் கற்றுக் கொடுக்கின்றனர்." என்றார் ஆசிரியர்

போன வருடம் நீங்கள் தானே சொன்னீர்கள் எல்லாரும் கண்டிப்பா கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும்-னு. என மறுபடியும் கேட்டான்.

ஆமா, சொன்னோன். அது மட்டுமே வாழ்வின் வெற்றிக்கான தகுதி என நான் சொல்லலையே!

"பட்டப்படிப்பு முடித்துப் பட்டம் பெறுவது மட்டும் வெற்றிக்கான தகுதி அல்ல. ஒருவனைச் சூழ்நிலை கலங்கடிக்கும் போதும். காலம் கடினமான சவால்களைக் கொடுக்கும் போதும் அதை எதிர்கொள்ளும் திறமை" அந்தத் திறமை தான் வெற்றிக்கான தகுதி". அது உன்னிடம் நிறைய இருக்கிறது எனச் சொன்னார் ஆசிரியர்.

அருள்முகன், மனக் கவலையிலிருந்து சற்று விடுபட்டான்.

ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்...

வீட்டிலிருந்து கவலையாக வந்தவனுக்கு, இப்போது மனதில் தைரியம் வந்துவிட்டது. வாழ்வில் திறமையுடன் செயல்பட்டு வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் அவனுள் தோன்றுகிறது. அப்படி நினைத்தபடியே இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் இடத்தையும் சென்று அடைந்தான்.

பண்ணையாறே... வணக்கம். நான்தான் வேலைக்கு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டிங்கலாம் ? எனக் கொஞ்சம் கோபத்துடன் கேட்டேன்.

பண்ணைக்காரர்; வாங்கத் தம்பி. உன்னுடைய கோபம் நியாயமானது தான். உங்களை மாதிரி இயற்கையை நேசிக்கின்றவர்கள் தான் இந்த மாதிரியான வேலையெல்லாம் நல்ல படியாகச் செய்வார்கள். நல்ல சம்பளம் கொடுத்தாலும் இயற்கையைப் பற்றின புரிதல் உள்ளவர்கள் கிடைப்பது கடினமாக இருக்கு. அதான் நான் உன்னைக் கேட்டேன். எனச் சொல்லிவிட்டு...

வா தம்பி பண்ணையைச் சுத்தி காட்டுகிறேன் எனக் கூறி பண்ணையையும் ஆட்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அருள்முகனை மட்டும் தனியா கூப்பிட்டு. படிக்க முடியலையே எனக் கவலை வேண்டாம். எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். திறமை இருந்தால் நீ நினைத்தது எல்லாம் உன்னை வந்து சேரும். எனக் கூறினார்

அருள் முகன்; சரி, பாத்துக்கலாம் பண்ணையாரே. எனக் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவனின் அயராத உழைப்பால் ஒரு வருடத்தில் பண்ணையார் எதிர்பார்த்த லாபத்தைக் கிடைத்தது.

உடனே பண்ணைக்காரர் அருள்முக.. வா எனக் கூப்பிட்டு! 


தொடரும்... பக்கம் 2....

பாடகர், எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. அலோபதி மருத்துவ மரணம்.. ஒரு பார்வை.

2020 ஆகஸ்ட் மாதம், லேசான காய்ச்சல் மற்றும், லேசான கொரான அறிகுறி அவ்வளவுதான்…

மூன்று, நான்கு நாளில் திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு நடந்து போன வரை இவ்வுலகில் இல்லாமல் செய்து விட்டார்கள்...

மருத்துவமனையில் கல்யாணநாள் கொண்டாடினார், இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார்...

2நாளில் வீடு திரும்பலாம்ன்னு சொல்லி கதை அளந்துட்டு 
51நாள் கழிச்சி ஐஸ் பாக்ஸில் வைத்து, சில, பல கோடி பணம் பெற்றுக் கொண்டு பாடியை கொடுத்தால் அது அலோபதி ஆங்கில மருத்துவம்…

யாரும் கேள்வி கேட்க கூடாது…

ஒரு விசாரனை கிடையாது ஒரு வழக்கு கிடையாது...

இதுக்கு யாரும் சமூக ஆர்வலர் என்ற பெயரில் கேள்வி கேட்டு, பொங்க மாட்டார்கள்… 

அப்படியே பொங்கினாலும், வழக்கு போட்டாலும்,
இங்கு எதுவும் மாறாது...

யாரையும், ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது...

எந்த ஊடகமும் வாயை திறக்காது... 

ஆனால் இதையே, ஏதோ ஒரு சித்த வைத்தியரோ, பரம்பரை வைத்தியரோ செய்திருந்தால் இன்று உலகமே பொங்கி இருக்கும்...

ஒரு மாதத்துக்கு அதுதான் மீடியாவில் டிரண்டிங்காக இருந்திருக்கும்... 

அதுக்கு அப்புறம் அந்த சித்த வைத்தியர் வாழ்க்கை அவ்வளவுதான்... 
சூன்யம்...

ஆனானப்பட்ட அம்மாவையே அமரர் ஆக்கியவங்ககிட்ட பாலு மாத்திரம் எம்மாத்திரம்… 

இவங்க நிலையே இப்படி இருக்கும் போது, சாதாரண ஜனங்கள் மக்களின் நிலை ?

இந்த அலோபதி மருத்துவர்களால் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. 

அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது… 

பண வெறி பிடித்தவர்கள்…

சரி போகட்டும்…
உங்ககிட்ட ஒரு சந்தேகம்…




நம் பாரம்பரிய சித்த வைத்தியரிடம், சித்த வைத்தியம் பார்த்து இதுவரை எத்தனை மரணங்கள் நீங்கள் கண்ணால் பார்த்திருக்கீங்க ?

இல்லையென்றால் உறுதியான ஆதாரத்தோட கேள்வி பட்டிருக்கீங்க ?

அதுபோல் ஆங்கில அலோபதி மருத்துவம் பார்த்து ஒவ்வொரு நாளும் மரணம் இல்லாத உங்கள் ஊர் அரசு/தனியார் பெரிய மருத்துவமனைகளை காண்பிக்க முடியுமா ? 

கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், நேர்மையான ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை கொண்டு சித்த வைத்தியம் பார்த்து இறந்தவர்களை கணக்கு எடுக்க வேண்டும்.

அதே போல் அலோபதி ஆங்கில மருத்துவத்துவம் பார்த்து கடந்த 50ஆண்டுகளாக இந்திய அளவில், அல்லது தமிழக அளவில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிகழ்ந்த மரணங்களை கணக்கு எடுக்க வேண்டும்...

அப்புறம் தெரியும் ஆங்கில அலோபதி மருத்துவத்தின் கோர முகம்...

* *இதுவரை அலோபதி ஆங்கில மருத்துவத்தால் முழுவதும் குணப்படுத்திய அல்லது இனி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று ஒரு வியாதியைச் சொல்ல முடியுமா ?* *

ஒரு சித்த வைத்தியரிடம் வந்து இந்த கஷாயத்தை குடித்தால் பக்க விளைவு வருமா என்று கேட்கும் தைரியமும், ஆம்பளைத்தனமும், எந்த ஆங்கில மருத்துவரிடமும் கேட்க துணிவு வருமா ? 

ஏன் அங்கே கேள்வி கேட்க ஆண்மை வருவதில்லை ?

சும்மா எதுக்கு எடுத்தாலும் அரசை மட்டுமே குறை சொல்ல கூடாது... 

அரசு என்பது நம்மால் நாமே ஆட்சி செய்வது... 

நாம் தேர்ந்து எடுத்தவர்கள் தான் நம்மை ஆளுகிறார்கள்...

அவர்கள் சரியில்லை என்று சொன்னால், காரணம் நாம் சரியான ஆட்களை தேர்வு செய்யவில்லை என்று அர்த்தம்தானே தவிர அவர்கள் மேல் குறையில்லை...

முதலில் நாம் திருந்துவோம்...

குவாட்டருக்கும் பிரியாணிக்கும் 500ரூபாய் பணத்துக்கும், நம் மதிப்பில்லா வாக்கை விற்க்காமல், நல்ல ஆட்களை தேர்ந்து எடுப்போம்...

அடுத்து நம் அனைத்து வியாதிகளுக்கும் சித்த வைத்தியத்தை நாடிச் சென்றால் என்ன கெட்டு விடும் ? 

குறைந்த செலவில் அனைவரும் நலமோடு இருப்போம் தானே...

அலோபதி மருத்துவத்தை விபத்து நேரத்தில் மட்டும் ஊறுகாயைப் போல பயன்படுத்திக் கொண்டு மற்ற அனைத்து விதமான உடல் உபாதைகளுக்கும் சித்த வைத்தியம் பார்க்க ஆரம்பித்தால் நம்மை யார் தடுக்க முடியும் ?

நம் ஆரோக்கியம் நம் கையில்...

நாமே சொந்த காசில் சூன்யம் வைத்துகொள்வது மாதிரி நாமே அவர்களிடம் காசையும் கொடுத்து வேதனையையும் வாங்கி ஏன் இறக்கணும் ?
நன்றாக யோசியுங்கள்...

2,000ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் சித்த வைத்தியத்தை தான் இனி பார்ப்போம் என்றால், இன்று அலோபதி மருத்துவமனையாக இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் 6வருடத்தில் சித்த மருத்துவமனையாக தானாக மாறி விடும்...

எப்படி என்றால் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் செக்குல ஆட்டின எண்ணை கிடைக்காது...

ஆனால் இன்றைக்கு ஊர் ஊருக்கு செக்கு இருக்கு, இயற்கை முறையில் ஆட்டிய எண்ணை கிடைக்குது...

அதேபோல் நாம் சித்த வைத்தியத்தை நாடினால் மட்டுமே, ஊர் முழுக்க உள்ள மல்டி ஷ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், இனி சித்த மருத்துவமனைகளாக மாறி விடும் சூழல் அமையும்...

இல்லை என்றால் ஒவ்வொரு ஊரிலும் சுடுகாட்டுக்கு பிணவரவு அதிகமாகிவிடும்...
அவ்வளவுதான்...
முடிவு உங்கள் கைகளில்...

பாடும்  நிலா பாலுவின் மருத்துவ போராட்டம் 
நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடமாக இருக்கட்டும்...

இனி இப்படி ஒரு சாவு 
எவர் வீட்டிலும் நிகழாமல் இருப்பது நம் கையில்...

இனி நாம் என்ன செய்யப் போகிறோம்.?

( ஒரு மரபுவழி தமிழ் மருத்துவர்)
-முன் அனுப்பல்-

புதன், 23 செப்டம்பர், 2020

நீங்களும் ராஜாவாக உருவாகலாம் (சிறுகதை)

                          "சிங்கம் காட்டுக்கு ராஜாவாக உருவான கதை" 

     மிருகங்களை வைத்து வித்தை காட்டும் இடத்திலிருந்து தன் 5 குட்டிகளுடன் தப்பித்து வந்த சிங்கம். காட்டின் சிங்க ராஜாவிடம் தனக்கு நடந்த இன்னல்களைச் சொல்லி. தன்னையும் கட்டில் சேர்த்துக் கொள்ளும் படி கேட்டது. தப்பித்து வந்த தாய் சிங்கம்.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, சில அறிவுரை கூறி. காட்டுக்குள் இருக்க அனுமதி வழங்கினார் சிங்க ராஜா.

தப்பித்து நீண்டதூரம் வந்ததால். களைப்பில் அனைத்தும் நல்லா தூங்கிவிட்டன - அரைத்தூக்கத்தில் ஒரு குட்டி மட்டும் முழிச்சு முழிச்சு பார்த்துகிட்டே இருந்தது. அப்படியே பொழுதும் விடிந்து விட்டது.

காலையில் தாய் சிங்கம் எழும்பிய உடனே, இரவு யாருமே உணவு கொண்டு வரவில்லை "அம்மா" நீங்க எல்லாரும் நல்லா தூங்கி விட்டீர்கள். நான் இரவு முழுவதும் முழித்துப் பார்த்தேன். தினம் உணவு கொடுத்தவர்கள் இன்று ஏன் உணவு கொண்டுவரவில்லை? எனக் கேட்டது குட்டி சிங்கம்.

தாய் சிங்கம்;  குட்டிகள் எல்லாத்தையும் ஒன்றாகக் கூப்பிட்டு. பாருங்கள் புள்ளங்களா. இனிமேல் நமக்கு யாரும் சாப்பிட உணவு கொடுக்க மாட்டார்கள். நம்மலாதன் உணவு தேடிச் சாப்பிடவேண்டும். நாம சாப்பிட்டது போக மிச்சத்தை மற்றவர்களுக்காக அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பது காட்டு ராஜாவோட கட்டளை. எனத் தாய் சிங்கம் சொன்னது.

உடனே ஒரு குட்டி;  நாம் தேடிய உணவை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்களும் நம்மைப் போல உணவு தேடிச் சாப்பிட வேண்டியது தானே. மிச்சம் உள்ளதை எடுத்து வந்தால் நாளைக்குச் சாப்பிடலாமே. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; இந்தக் கட்டில் உணவு தேட முடியாத நிலையில் பல உயிர்கள் இருக்கிறதாம். அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பது சிங்க ராஜாவின் கட்டளை. அதுமட்டுமல்ல இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதால் பஞ்சமோ, பேர்ஆபத்தோ இந்த இடத்தில் வந்ததே இல்லையாம். புதிதாக வந்த நாமும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். எனக் கூறியது தாய் சிங்கம்.

மற்ற ஒரு குட்டி; போன வருஷம் நாம் இருந்த இடத்தில். நாம இருந்த இடத்திற்கே வந்து உணவு கொடுத்து உதவினார்களே அம்மா. அங்கு மட்டும் ஏன் பஞ்சம் வந்தது. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; அங்கு நம் சுய உணர்வை மழுங்கடித்து, அடிமைப்படுத்தி நம்மால் அங்கே உணவு தேட முடியாதபடி அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு. அவர்கள் சொல்லும் செயலைமட்டும் செய்ய வேண்டும். வித்தையை (சர்க்கஸ்) காண வரும் மனிதர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் கூடப் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார்கள். தண்ணீரை எல்லாம் பாட்டிலில் அடைத்து வைத்திருப்பார்கள். நம்மைப் போன்ற விலங்குகள் மற்றும் பணம் இல்லாதவர்கள் அங்கு வாழமுடியாது. 

நம் சிங்க ராஜா மாதிரி நல்லவர்கள் இல்லை அவர்கள். அதனால் தான் அந்த மனிதர்கள் வாழும் இடத்தில் பஞ்சமும், பெருநோய்களும் வருகிறது. இதை எல்லாம் பார்த்துச் சகிக்க முடியாமல். உங்களைக் கூட்டிக்கொண்டு சிங்க ராஜா நாட்டுக்குத் தப்பித்து வந்துவிட்டேன். எனத் தாய் சிங்கம் தன் பிள்ளைகளிடம் கூறியது.

வெறோரு குட்டி; யாரென்றே தெரியாத நமக்குத் தங்க இடம் கொடுத்த, சிங்க ராஜா மதாரி அன்புள்ளம் கொண்ட மனிதர்களே இல்லையா அம்மா? எனக் கேட்டது

தாய் சிங்கம்;  நான் இதுவரைக்கும் அப்படிப் பட்ட மனிதர்களைப் பார்த்ததே இல்லை எனச் சொன்னது.

காட்டு ராஜா; அப்போது, மறைவில் நின்று. எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜா சிங்கம்..  பிள்ளைகளை இங்கு வாங்க. உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.எனக் கூப்பிட்டு.  

உங்கள் சிங்க ராஜாவான எனக்கே ஒரு மனிதர்தான் அன்பைச் சொல்லிக் கொடுத்தார். "மனிதர்களில் மகத்தனவர்கள் மண்ணுலகில் உள்ளனர்" எனச் சொன்னது காட்டு ராஜா.

ஒரு குட்டி அது எப்படி? நீங்கள் அவரைச் சாபிடலய? எனக் கேட்டது.

ராஜா சிங்கம்;  நான் அவரைச் சப்பிடத்தான் போனேன். அவர் பக்கத்தில் போனதும் என் மதி மயங்கி, தாய் சிங்கம் குட்டிகளை அன்போடு சுற்றுவது போல நான் அவரைச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் அதுவரை அப்படியொரு நபரைப் பார்த்ததே இல்லை! 

எனது இயற்கை குணம் மாறியது போல ஒரு எண்ணம் என்னுள் தோன்றியது. உடனே பயம் வந்துவிட்டது. அப்போது நான். அவரிடம், என்னைக் காப்பாற்றுங்கள் அய்யா. 

நான் எப்படி இப்படி ஆனேன்? என் இயற்கை குணத்தை மீட்டுத் தாருங்கள். எனக் கேட்டேன்.

அதற்கு அந்த மாமனிதர்; சொன்னார் "பெரு நெருப்பின் அருகில் இருப்பதை எல்லாம் பெரு நெருப்பு தன் வயப்படுதிக்கொள்ளும். போலப் பேரன்பு கொண்டு உயிர்கள் மீது கருணைக் காட்டுகின்ற மனிதர்கள் பக்கத்தில் (உன்னைப் போன்ற கொடிய குணம் கொண்டவர்கள் )யார் வந்தாலும் அன்பின் வயப்பட்டு விடுவார்கள்." அதனால் தான் நீ இப்போது அன்பு வயப்பட்டு இப்படி நிற்கிறாய். எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; அதற்கு நான், என் இயற்கை குணத்தை எப்படி மீட்பது? எனக் கேட்டேன். 

அந்த மாமனிதர் ; இப்போது இருக்கும் நிலை தான் உன் இயற்கை குணம். அன்பு மட்டுமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயற்குணம். இந்த இடத்தைவிட்டு நீ போய் விட்டால், உன்னுடன் இடையில் வந்து சேர்ந்த துற்குணங்கள் உன்னை வந்து ஒட்டிக்கொள்ளும். துற்குணங்களால் வாழ்வில் நஷ்டம் மட்டுமே ஏற்படும் எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; எனக்கு, வாழ்வில் எதிலுமே நஷ்டம் ஏற்ப்படமல் இருக்க என்ன செய்யவேண்டும்? எனக் கேட்டேன்.

அந்த மாமனிதர்;  அன்பு எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் பிடியில் அகப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் நீ இப்போது அன்பின் பிடியில் அகப்பட்டு இருக்கிறாய். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ. நான் சொல்வதை வாழ்வில் கடைப்பிடித்தால் போதும். நீ உன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.

நானும், அவர் சொன்னதை ஏற்று, அவர் காட்டிய வழியில் உயிர்களுக்கு நேசத்துடன் உதவி வாழத் தொடங்கினேன். அன்று முதல் என் வாழ்வில் உயர்வுதான்.

சாதாரண நிலையிலிருந்த என்னை இந்தக் காட்டுக்கே ராஜாவாகும் நிலைக்கு உயர்த்தியது. நீங்களும் பேரன்போடு மற்றவர்களுக்கு உதவி வாழ வேண்டும். என்றது சிங்க ராஜா ..

*இந்த ராஜா சிங்கத்தொட கட்டலையோ ஏற்று இன்று வரைக்கும் உலகில் உள்ள சிங்கங்கள் எல்லாம் உணவு தேடியே உண்ணும். உண்டது போக மிச்சத்தை மற்றவை உண்ணட்டும் என அங்கேயே போட்டுவிட்டு வருகின்றன.

அன்புடன்

 வள்ளலார்மாணவன் NAGA

22/09/2020

::::::::::::::::::::::::::

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய்:12000 அரசு வழங்குகிறது

   அரசுப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நடத்தும் * என்.எம்.எம்.எஸ் * தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு  12000 / - 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை (9 ஆம் வகுப்பு முதல் இடைநிலை வரை) அதாவது 48000 / - 4 வருடம் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி *: - 26-09-2019, *

 தேர்வு தேதி: - * 04-11-2019 

 வலைத்தளம் * www.bse.ap.gov.in *

 முழு விவரங்களுக்கு

       செல்: 8332977207,8332977607

             உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு, ஏழை மாணவர்களுக்கு உதவ உங்கள் பங்கைச் செய்யுங்கள்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 விநாயகர் சதுர்த்தி பாடல்


கந்தனுக்கு முன்பிறந்த கணேசா 

எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் கணேசா...

கணநாத வள்ளலே கணேசா 

எங்களைக் காத்தருள வேண்டும் கணேசா...

கடலைப் பொரி அவலுடன் காண வந்தோம் கணேசா

எங்கள் கவலைகளை நீக்கவேண்டும் கணேசா....

பேரன்புமிக்க வரை கணேசா- நீ

பெருச்சாளி வாகனனே கணேசா...

வாழையடி வாழையாய் வணங்கி வாரோம் கணேசா

வளமுடன் நல்முடன் வாழ வைப்பாய் கணேசா...


            2020  விநாயகர் சதுர்த்தி

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...