புதன், 23 செப்டம்பர், 2020

நீங்களும் ராஜாவாக உருவாகலாம் (சிறுகதை)

                          "சிங்கம் காட்டுக்கு ராஜாவாக உருவான கதை" 

     மிருகங்களை வைத்து வித்தை காட்டும் இடத்திலிருந்து தன் 5 குட்டிகளுடன் தப்பித்து வந்த சிங்கம். காட்டின் சிங்க ராஜாவிடம் தனக்கு நடந்த இன்னல்களைச் சொல்லி. தன்னையும் கட்டில் சேர்த்துக் கொள்ளும் படி கேட்டது. தப்பித்து வந்த தாய் சிங்கம்.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, சில அறிவுரை கூறி. காட்டுக்குள் இருக்க அனுமதி வழங்கினார் சிங்க ராஜா.

தப்பித்து நீண்டதூரம் வந்ததால். களைப்பில் அனைத்தும் நல்லா தூங்கிவிட்டன - அரைத்தூக்கத்தில் ஒரு குட்டி மட்டும் முழிச்சு முழிச்சு பார்த்துகிட்டே இருந்தது. அப்படியே பொழுதும் விடிந்து விட்டது.

காலையில் தாய் சிங்கம் எழும்பிய உடனே, இரவு யாருமே உணவு கொண்டு வரவில்லை "அம்மா" நீங்க எல்லாரும் நல்லா தூங்கி விட்டீர்கள். நான் இரவு முழுவதும் முழித்துப் பார்த்தேன். தினம் உணவு கொடுத்தவர்கள் இன்று ஏன் உணவு கொண்டுவரவில்லை? எனக் கேட்டது குட்டி சிங்கம்.

தாய் சிங்கம்;  குட்டிகள் எல்லாத்தையும் ஒன்றாகக் கூப்பிட்டு. பாருங்கள் புள்ளங்களா. இனிமேல் நமக்கு யாரும் சாப்பிட உணவு கொடுக்க மாட்டார்கள். நம்மலாதன் உணவு தேடிச் சாப்பிடவேண்டும். நாம சாப்பிட்டது போக மிச்சத்தை மற்றவர்களுக்காக அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பது காட்டு ராஜாவோட கட்டளை. எனத் தாய் சிங்கம் சொன்னது.

உடனே ஒரு குட்டி;  நாம் தேடிய உணவை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர்களும் நம்மைப் போல உணவு தேடிச் சாப்பிட வேண்டியது தானே. மிச்சம் உள்ளதை எடுத்து வந்தால் நாளைக்குச் சாப்பிடலாமே. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; இந்தக் கட்டில் உணவு தேட முடியாத நிலையில் பல உயிர்கள் இருக்கிறதாம். அவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பது சிங்க ராஜாவின் கட்டளை. அதுமட்டுமல்ல இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதால் பஞ்சமோ, பேர்ஆபத்தோ இந்த இடத்தில் வந்ததே இல்லையாம். புதிதாக வந்த நாமும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். எனக் கூறியது தாய் சிங்கம்.

மற்ற ஒரு குட்டி; போன வருஷம் நாம் இருந்த இடத்தில். நாம இருந்த இடத்திற்கே வந்து உணவு கொடுத்து உதவினார்களே அம்மா. அங்கு மட்டும் ஏன் பஞ்சம் வந்தது. எனக் கேட்டது.

தாய் சிங்கம்; அங்கு நம் சுய உணர்வை மழுங்கடித்து, அடிமைப்படுத்தி நம்மால் அங்கே உணவு தேட முடியாதபடி அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு. அவர்கள் சொல்லும் செயலைமட்டும் செய்ய வேண்டும். வித்தையை (சர்க்கஸ்) காண வரும் மனிதர்களுக்குத் தாகத்திற்குத் தண்ணீர் கூடப் பணம் கொடுத்தால் தான் கொடுப்பார்கள். தண்ணீரை எல்லாம் பாட்டிலில் அடைத்து வைத்திருப்பார்கள். நம்மைப் போன்ற விலங்குகள் மற்றும் பணம் இல்லாதவர்கள் அங்கு வாழமுடியாது. 

நம் சிங்க ராஜா மாதிரி நல்லவர்கள் இல்லை அவர்கள். அதனால் தான் அந்த மனிதர்கள் வாழும் இடத்தில் பஞ்சமும், பெருநோய்களும் வருகிறது. இதை எல்லாம் பார்த்துச் சகிக்க முடியாமல். உங்களைக் கூட்டிக்கொண்டு சிங்க ராஜா நாட்டுக்குத் தப்பித்து வந்துவிட்டேன். எனத் தாய் சிங்கம் தன் பிள்ளைகளிடம் கூறியது.

வெறோரு குட்டி; யாரென்றே தெரியாத நமக்குத் தங்க இடம் கொடுத்த, சிங்க ராஜா மதாரி அன்புள்ளம் கொண்ட மனிதர்களே இல்லையா அம்மா? எனக் கேட்டது

தாய் சிங்கம்;  நான் இதுவரைக்கும் அப்படிப் பட்ட மனிதர்களைப் பார்த்ததே இல்லை எனச் சொன்னது.

காட்டு ராஜா; அப்போது, மறைவில் நின்று. எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜா சிங்கம்..  பிள்ளைகளை இங்கு வாங்க. உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.எனக் கூப்பிட்டு.  

உங்கள் சிங்க ராஜாவான எனக்கே ஒரு மனிதர்தான் அன்பைச் சொல்லிக் கொடுத்தார். "மனிதர்களில் மகத்தனவர்கள் மண்ணுலகில் உள்ளனர்" எனச் சொன்னது காட்டு ராஜா.

ஒரு குட்டி அது எப்படி? நீங்கள் அவரைச் சாபிடலய? எனக் கேட்டது.

ராஜா சிங்கம்;  நான் அவரைச் சப்பிடத்தான் போனேன். அவர் பக்கத்தில் போனதும் என் மதி மயங்கி, தாய் சிங்கம் குட்டிகளை அன்போடு சுற்றுவது போல நான் அவரைச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் அதுவரை அப்படியொரு நபரைப் பார்த்ததே இல்லை! 

எனது இயற்கை குணம் மாறியது போல ஒரு எண்ணம் என்னுள் தோன்றியது. உடனே பயம் வந்துவிட்டது. அப்போது நான். அவரிடம், என்னைக் காப்பாற்றுங்கள் அய்யா. 

நான் எப்படி இப்படி ஆனேன்? என் இயற்கை குணத்தை மீட்டுத் தாருங்கள். எனக் கேட்டேன்.

அதற்கு அந்த மாமனிதர்; சொன்னார் "பெரு நெருப்பின் அருகில் இருப்பதை எல்லாம் பெரு நெருப்பு தன் வயப்படுதிக்கொள்ளும். போலப் பேரன்பு கொண்டு உயிர்கள் மீது கருணைக் காட்டுகின்ற மனிதர்கள் பக்கத்தில் (உன்னைப் போன்ற கொடிய குணம் கொண்டவர்கள் )யார் வந்தாலும் அன்பின் வயப்பட்டு விடுவார்கள்." அதனால் தான் நீ இப்போது அன்பு வயப்பட்டு இப்படி நிற்கிறாய். எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; அதற்கு நான், என் இயற்கை குணத்தை எப்படி மீட்பது? எனக் கேட்டேன். 

அந்த மாமனிதர் ; இப்போது இருக்கும் நிலை தான் உன் இயற்கை குணம். அன்பு மட்டுமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயற்குணம். இந்த இடத்தைவிட்டு நீ போய் விட்டால், உன்னுடன் இடையில் வந்து சேர்ந்த துற்குணங்கள் உன்னை வந்து ஒட்டிக்கொள்ளும். துற்குணங்களால் வாழ்வில் நஷ்டம் மட்டுமே ஏற்படும் எனச் சொன்னார்.

ராஜா சிங்கம்; எனக்கு, வாழ்வில் எதிலுமே நஷ்டம் ஏற்ப்படமல் இருக்க என்ன செய்யவேண்டும்? எனக் கேட்டேன்.

அந்த மாமனிதர்;  அன்பு எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் பிடியில் அகப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் நீ இப்போது அன்பின் பிடியில் அகப்பட்டு இருக்கிறாய். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் கொஞ்ச காலம் என்னுடன் இருந்துவிட்டுப் போ. நான் சொல்வதை வாழ்வில் கடைப்பிடித்தால் போதும். நீ உன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.

நானும், அவர் சொன்னதை ஏற்று, அவர் காட்டிய வழியில் உயிர்களுக்கு நேசத்துடன் உதவி வாழத் தொடங்கினேன். அன்று முதல் என் வாழ்வில் உயர்வுதான்.

சாதாரண நிலையிலிருந்த என்னை இந்தக் காட்டுக்கே ராஜாவாகும் நிலைக்கு உயர்த்தியது. நீங்களும் பேரன்போடு மற்றவர்களுக்கு உதவி வாழ வேண்டும். என்றது சிங்க ராஜா ..

*இந்த ராஜா சிங்கத்தொட கட்டலையோ ஏற்று இன்று வரைக்கும் உலகில் உள்ள சிங்கங்கள் எல்லாம் உணவு தேடியே உண்ணும். உண்டது போக மிச்சத்தை மற்றவை உண்ணட்டும் என அங்கேயே போட்டுவிட்டு வருகின்றன.

அன்புடன்

 வள்ளலார்மாணவன் NAGA

22/09/2020

::::::::::::::::::::::::::

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...