தமிழகம் என்னும் நூலகம்
தலைப்பு மட்டும் தமிழினம்
திட்டம் தீட்டி வளருது ஓரினம்
திண்டாடி நிற்கிறது தமிழினம்!
கரையான் கூட்டத்துக்குக் கதவைத் திறந்து விட்டு
கதவருகே காவலுக்குக் ரெண்டு ஆளையும் போட்டு
நூலகத்தில் காத்து வச்ச காவியமெல்லாம்
நுனிகூட முறியாமல் நூறாண்டுகள் இருக்குமென்றான்!
தமிழர் என்னும் புத்தகம்
முதலும் முடிவும் இல்லாது
அகமும் அர்த்தமும் இல்லாது -தமிழர்
அறமும் மறமும் அழிக்கப்பட்டு -நாம்
அடிமை ஆக்கப்பட்டோம்!
சொன்னதை எல்லாம் கேட்டதாலே
சோம்பேறியாக ஆக்கப்பட்டோம்
சோற்றுக்காக இலவசத்தை நம்பிவிட்டோம்
சொந்த ஈழத்தை இழந்துவிட்டோம்
மதுக்குடி மயக்கத்தைப் பெற்றுவிட்டோம் - அதனால்
இயற்கை குணத்தை மறந்து விட்டோம்
இதற்கான காரணத்தைக் கண்டுவிட்டோம்!
இன்றே விழித்திடுவோம்
இல்லையே அளிக்கப்படுவோம்
இன்று அதிகாரம் எல்லாம் அவனிடம்! -
வென்று நாளை ஆளப்போவது தமிழினம்
இனிமேல்தான் வாழப்போகுது நம்மினம்
விழித்திடு தமிழா விழித்திரு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக