சனி, 19 ஆகஸ்ட், 2023

பூலித் தேவர் வரலாறு

பூலித் தேவர் 

"பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்" 


 முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவர் அவர்கள் நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது.


பெற்றோர் சித்திரபுத்திர தேவர் சிவஞான நாச்சியார். 1715 செப்.1ல் பிறந்தார் ‘காத்தப்ப பூலித் தேவர்’. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர். 


தமிழ் இலக்கண, இலக்கிய நூல் கற்று கவிதை எழுதும் திறம் பெற்றார்.


பன்னிரண்டு வயதில் போர்ப் பயிற்சி பெற்று  குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் என அனைத்து வீர விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.


புலிகளுடன் விளையாடுவதிலும் புலித்தோல் புலி நகம் அணிவதிலும் பெரு விருப்பம் இருந்ததால் புலித்தேவர் என்றும் அழைத்துள்ளனர். 


அவரது பெற்றோர் காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 லேயே பட்டம் சூட்டி மன்னராகினார்கள்.


பின்னர் பூலித்தேவர் மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை  திருமணம் செய்தார்.அவர்களுக்கு கோமதிமுத்துத் தலவாச்சி, சித்திரபுத்திர தேவன், சிவஞான பாண்டியன் என மூன்று மக்கள் பிறந்தனர்.


பூலித்தேவர் காலத்தில்தான் நாயக்கர் ஆட்சி நலிவுற்று பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுற்று ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயர் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. 


அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்றுகூட்டி பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பூலித்தேவர்.அவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர்.


ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார் ஆற்காடு நவாப். அது முதல், ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களுடன் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்.

மாபூஸ்கான், கர்னல் ஹெரான் இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக ஆங்கிலேயரின் தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. அதன் பின் கோட்டையை விட்டு வெளியே வந்த பூலித்தேவன் ஆங்கிலப் படைகளை சின்னாபின்னமாக்கினார். இந்த முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து போர் வரும் அபாயத்தை உணர்ந்தார். மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த முயன்றார். ஆனால் அவர்களோ, தங்கள் அரசாட்சியே போதும் என சுயநலத்துடன் ஒதுங்கினர்.

அதன்பின்னர் பூலித்தேவர் அவர்கள் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்த சுதேசியப்படை என்ற ஒரு புதிய படையை ஏற்படுத்தி மருதநாயகத்திடம் (யூசுப்கான்)ஒப்படைத்தனர். யூசுப் கானே பின்னாளில் , ஆங்கிலேயருடன் இணைந்து, சுதேசிப் படையைக் கொண்டே பூலித்தேவரை எதிர்த்தார்.


1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.


மறைவு நாள் (10-08-1767)

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலி

சிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை

தியாக செம்மல் வ.உ.சி  

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை

கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.



வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. 


தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது. 


ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.


கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.


நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.


கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.


இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது. 


ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.


இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.




அப்போது, 

1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,

2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,

3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது. 

இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.


ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான். 


பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர். 


திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி அலெக்ஸ் ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார். 


இதற்குள் ஓர் இரகசியம்ஒளிந்து இருந்தது.

வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் ராஜினாமா செய்து ஓடினர். 

அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் விற்றுவிட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா கப்பலைவெள்ளையருக்கேவிற்றுவிட்டது தான்.


இதனை அறிந்த வ உ சி...


"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.


பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார் 

வ உ சி.

நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.


ஓங்கட்டும் வ.உ.சி புகழ்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

உண்மையை நீ தேடு - கவிதை

கனிமவளக் கொள்ளை

"உண்மையை நீ தேடு"

 

நாடு நல்ல நாடு 

நம்மளோட நாடு 

நல்லபடி வாழணுமா 

உண்மையை நீ தேடு!


பார்ப்பதற்கு

பசுமையானால்

 பயிராகுமா!



படங்களிலே 

பழம் இருந்தால் 

பசிக்காகுமா!


பண்புகெட்டவன் 

பதவி ஏறினால்

 நீதி கிடைக்குமா!


வாழ்க வாழ்க 

என்று சொன்னால் 

வறுமை ஒழியுமா!


களவுபோன 

மலைகள் தான் 

காட்சி கொடுக்குமா!


காடு மலையை

காக்காதது 

அரசாகுமா!


அதை கண்டுக்காமல் 

கடப்பவன் 

மனிதன் ஆகுமா


பக்தன் வேடம் 

போட்டு விட்டால் 

பக்தியாகுமா!


தேசபக்தன் என 

சொல்லி விட்டால் 

தேசம் வளருமா!


தெருவுக்கெல்லாம் 

தேசத் தலைவர் 

பெயர் வேண்டுமா

தேம்பி அழும் 

குழந்தைக்கு சோறு 

வேண்டாமா!!


அவள் நினைவே சுகமாகும் - கவிதை

 அவள் நினைவே சுகமாகும்

பூ ஒன்னு அங்கு இருக்க 

தேன் வந்து இங்கு சுரக்க

 நித்திரையில் தேன் குடிக்க

உன் நினைவில் நான் துடிக்க


சொப்பனத்தில் வந்தவளே 

சொக்குப்பொடி போட்டியடி 

சொர்க்கமே நீ தானு

சொல்லாமல் சொன்னியேடி


 பெண்ணழகு எல்லாம் 

உன் வடிவில் கண்டேனே 

பேச மொழியின்றி 

பேதையாக சென்றேனே  - உன்

அழகுக்கு முன்னாடி 

அடிமையாகி நின்றேனே


மணம் வீசாத மல்லிகை பூ - வரதட்சிணை கொடுமை - கவிதை

 “மணம் வீசாத மல்லிகை பூ”

மோகம் கொண்ட மேனி இது 

சோகத்தில் வாடுது

தூது சென்ற மேகம் எல்லாம் 

தூசியா போகுது


தண்ணிக்குள்ள நானிருந்தும்

தேகம் தாகத்தில வாடுது

தங்கம் இன்றி போனாதால் 

தாலிக்கு ஏங்குது


ஆசை வந்து அசைக்கிது 

அடி மனசு அழுவுது 

காசின்றி போனதால 

கண்ணீர் வடியுது


பூச்சூடும் நாள் எல்லாம் 

பூ வாசம் பிடிக்கவில்லை

பூவாக நான் இருந்தும் 

வாசனை வீசவில்லை


வாசலுக்கு வந்தவுக 

வாசனையை பாக்கலையே 

வசதிய பார்த்தாக 

வண்டியத்தான் கேட்டதாக


பூக்கும் முன்னால பூச்சூடி இருந்தேனே

பூத்த பின்னால பூநாகம் ஆனேனோ!!


மோகம் கொண்ட மேனி இது 

சோகத்தில் வாடுது

தூது சென்ற மேகம் எல்லாம் 

தூசியா போகுது


அறிவை வளர் - கவிதை

  அறிவை வளர் 

பாரடா தம்பி பாரடா 

பாரத பூமியை பாரடா (நம்)

பாட்டன் ஆண்ட பூமிடா (இதை)

பத்திரமாய் மீட்பதிங்கு யாரடா


நாட்டின் வளங்களை பாரடா 

இதில் வறுமை வந்தது ஏனடா

நல்லவர் கூட்டம்  எங்கடா 

நால்வர்ணம் செய்த பிழையடா

(நால்வர்ணம் செய்த சதியடா)


கேளடா தம்பி கேளடா  - உன்

கேள்வி அறிவால்  கேளடா

அறிவை மிஞ்சியவர் யாருடா 

அதை வளர்க்க வழி தேடடா!!


உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் 

உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும்

அறிவு விரிந்து செல்ல வேண்டும் 

பார்வை கனிந்து செல்ல வேண்டும்

மனதில் உறுதி கொள்ள வேண்டும் 

மனிதம் உன்னால் வாழ வேண்டும் 

மகுடம் தன்னாலே வர வேண்டும்.


சனி, 5 ஆகஸ்ட், 2023

எண்ணுவது கைக்கெட்டும்

 எண்ணுவது கைக்கெட்டும்


"வெள்ள தலையணை மலர் நீட்டும் மாந்தர்தம் உள்ளத்தினை உயர்வு"


குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம் என்பது அந்தக் குளத்தின் நீர் மட்டம் எவ்வளவு இருக்கிறதோ அதுதான் குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம். அதைப் போன்று ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இருக்கின்ற எண்ணத்தின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையின் உயரம் நிர்ணயிக்கப்படுகின்றது.  


நம் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த இடத்தில் இருந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், முதலில் இலக்கை தீர்மானிக்க வேண்டும். இலக்கை தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களது இலக்கையே தவறாக தீர்மானித்து விடுகின்றனர்.  


மயில் ஆடுவதை பார்த்து வான்கோழி தானும் தொகை விரித்து மயில் போல ஆட வேண்டுமென ஆசைப்பட்ட கதையாக இருக்கக்கூடாது. பல சமயங்களில் சிலரை பார்த்து தவறான ஒன்றை இலக்காக தீர்மானித்து முயற்சித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிக்கின்றனர். 


ஓர் இலக்கை தீர்மானிப்பதற்கு முன்னால், நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதனை கடந்து வந்திருக்கிறேன்? என்னை சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள்? நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இது போன்ற கேள்விகளை தனக்குத்தானே உருவாக்கி அதற்கு பதிலும் அளித்துக் கொள்ள வேண்டும்...


அதன் பிறகு இலக்கை தீர்மானியுங்கள். நமக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அந்தத் தெளிவு நம்மை இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும். நாளைய இலக்கை அடைவதற்காக தினந்தோறும் பணிகளுக்கு இடையே சிறுதேனும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 


*எதற்கும் தயாராக இருங்கள்*

உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்து சற்று விலகி, உங்களுக்கென ஒரு இலக்கை தீர்மானித்த பின்பு எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியமான ஒன்று. உங்களது எண்ணம் இலக்கை நோக்கி பயணிக்க துவங்கியவுடன், உங்களுடைய இலக்குடன் தொடர்புடைய பல்வேறு நபர்களை உங்களுக்கு இயற்கை அறிமுகப்படுத்தும் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள், நான் எதையும் சரியாக செய்து முடிப்பேன்! என்ற முனைப்போடு எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 


மண்ணில் விதைக்கப்பட்ட விதை பல நாட்களாக நீரின்றி அப்படியே கிடைக்கின்றது. ஒருநாள் இரவு மழை பெய்கின்றது. மழை நீரை ஆதாரமாகக் கொண்டு வேர் விட்டு முளைக்க ஆரம்பிக்கின்றது. விதை எப்பொழுதும் தயாராக இருந்தது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது புதிய பயணத்தை தொடங்கியது. விதை போல தயாராக இருங்கள்.


சுய ஒழுக்கத்தோடும், நல்ல எண்ணங்களோடும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அதற்கான நற்பலனை தந்து கொண்டே இருக்கும்.

தனித்துவமானவர்களின் செயலும், பெயரும் ஒரு நாள் தலை நிமிர்ந்து நிற்கும்!. 


செயல்படுத்தி பாருங்கள். நீங்களும் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். 


"எதுவரை உன் செயலும்

 உன் பெயரும் தெரியுமோ 

 அதுவரை 

 உன் பேச்சு கவனிக்கப்படும்! 

 

எவருக்கெல்லாம் உன் செயலும் 

உன் பெயரும் தொரியாதோ 

அவருக்கெல்லாம் 

ஆயிரம் சத்தத்தில் அதுவும் ஒன்றாம்"


உங்கள் குரல் எதுவரை கேட்கும்?

நீங்கள் நினைக்கும் இடமெல்லாம் கேட்ட வேண்டும்!!

.


*குட்டிக்கதை*

       தென்பாண்டி நாட்டில் ஒரு சிற்றூரில் ஒரு இளம்சிறுவன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் எப்படியாவது நாம் அரண்மனைக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டுக் கொண்டே இருந்தான்.


 தந்தையோ விறகு வெட்டும் தொழிலாளி. தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. மனதில் தெளிவான சிந்தனையோடு அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் சிறுவன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். 

 

 இங்க பாரு, அரண்மனையில் வாழ வேண்டும் என்றால் ஒன்னு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ இருக்க வேண்டும். இதில் எந்த இடத்திலும் நாம் இல்லை. நாம் அங்கு செல்லவும் முடியாது. என்றார் சிறுவனின் தந்தை.


 நான் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகவேண்டும். 

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அப்பா. என்றான் சிறுவன்.


அதை சோல்லும் அறிவு எனக்கு இல்லை. நீ படிக்கின்ற இடத்தில்தானே அமைச்சர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர். அதனால் உங்கள் ஆசானுக்கு இந்த கேள்விக்கு பதில் நன்றாகத் தெரியும். உங்கள் ஆசானிடம் கேட்டுத்தெரிந்துகொள். இருந்தாலும்... இப்படிப்பட்ட ஆசை உனக்கு தேவையில்லை... என தயங்கியபடி சொன்னார் சிறுவனின் தந்தை. 


 நீங்கள் தேவை அற்றதை பேசி என் நேரத்தை வீனடிக்காதீர்கள் அப்பா. நான் என் ஆசானை பார்த்துவிட்டு வருகிறேன். சொல்லிச் சென்றான் சிறுவன்.


ஆசான் இருப்பிடத்துக்கு சென்ற சிறுவன் தன் எண்ணத்தை அனைத்தையும் தன் ஆசானிடம் சொன்னான். அதனைக் கேட்ட ஆசான் கண்டிப்பாக நீ அரசவையில் பணியாற்ற முடியும். நான் சொல்லும் கருத்துக்களை நினைவில் வைத்துக்கொள்.

1. சொல் அறிந்து சொல் 

2. இந்த கனத்தில் வாழ் 

3. உனக்குள் தோன்றும் நல்ல எண்ணங்கள் நீ செய்வதற்காகவே வருகிறது. 

4. இது உனக்கான வாழ்கை அதை நீதான் கட்டி எழுப்ப வேண்டும். 

இந்தை சரியாக பயன்படுத்து. 


பத்து ஆண்டுகள் திறம்பட கல்வி கற்ற நீ, இன்று முதல் உன்னை அமைச்சராக நினைத்துக்கொள். ஒரு மாதம் நாட்டைச் சுற்றிவந்து நிறை, குறைகளை என்னிடம் சொல். எந்த சூழலிலும் உன் எண்ணத்தை பிறரிடம் சோல்லாதே.. எனக் கூறி அனுப்பிவைத்தார் ஆசான்.


ஆசான் வழிகாட்டிய படி நாட்டின் ப‌ல்வேறு பகுதிகளுக்கும் சென்று குறிப்பு எடுத்துக்கொண்டான். 

ஒரு மாதமும் கடந்துவிட்டன.


 காலம் தாமதிக்காமல் ஆசானிடம் சென்றான். தான் குறித்து வைத்திருந்த நாட்டின் நிறை குறைகளை ஆசானிடம் கூறினான். 


நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது உனது குறிப்புகள். அரண்மனையில் உனக்கென ஒர் இடம் உள்ளது. உன் திறமையால் மன்னரை நீ சந்திக்க வேண்டும். நீ உள்வாங்கிய வற்றில் குறையை மன்னரிடம் சொல். நிறையை அமைச்சரிடம் சொல். நல்ல மனிதனாக மக்களிடம் செல். என்று கூறி அனுப்பினார் ஆசான்.


சிறுவன் விட்டுக்கு வந்தான். 


 நான் நமது மன்னரை சந்திக்க வேண்டும் ஏதாவது ஒரு வழிசொல்லுங்கள் அப்பா? என தொடர்ந்து கேட்டு நச்சரிசிக்கிட்டு இருக்க...


 அவனது அப்பா கோபமாக, மன்னர் நகர் வளம் வரும்பொழுது குறுக்கே சென்று சாலையின் நடுவே நின்று கொள். போ. மன்னரின் பாதுகாவலர்கள் உன்னை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அரண்மனைக்கு சென்ற பின்பு மன்னர் முன் உன்னை நேர் நிறுத்துவார்கள்.

 

  நீ சந்தித்து பேசுவியோ, சவுக்கு அடி வாங்குவியோ எனக்குத் தெரியாது.

 

தப்பிப்பது உன்னுடைய சாமர்த்தியம். என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.


 சிறுவன் யோசித்தான். இப்படி செய்ய முடியுமா? செய்யலாமா? இப்படி செய்தால் அரசனிடம் பேச முடியுமா? என்று சிறிய யோசனைக்குப் பிறகு மன்னர் வரும் வழியில் குறுக்கே நிற்பதாக முடிவு எடுத்தான்.


மன்னர் எப்பொழுது வருவார் என காத்துக் கொண்டிருந்தான்.


சில தினங்கள் கழித்தன. சிறுவனின் பக்கத்து நகரத்திற்கு மன்னர் வருகிற செய்தி அறிந்த சிறுவன் தயாராக இருந்தான். அந்த நகரின் சாலை வழியாக மன்னர் வருகிற செய்தி அறிந்ததும் மக்கள் அனைவரும் சாலையை விட்டு ஓரமாக ஒதுங்கி நிற்கிறார்கள். இவன் மட்டும் சாலையை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தான். 


மன்னரின் தேர் காவலர்கள் சத்தமிட்டு ஒதுங்கும்படி சொல்கிறார்கள். ஆனால், இவன் சாலையை விட்டு நகர்வதாக இல்லை.


 மன்னர் நகர் வலம் வரும் பொழுது வழியில் இடைமறித்து நின்ற குற்றத்திற்காக உன்னை கைது செய்கிறோம் எனக் கூறி, தேர் காவலாளிகள் சிறுவனை சிறை பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

அரண்மனை வாகனத்தில் பயணிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் சிறுவன் பயணித்துக் கொண்டிருந்தான்.


சிறுவனை கைது செய்து அழைத்துச் செல்வதை கண்ட, அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் கவலையோடு இருந்தனர். ஆனால் சிறுவனோ நாம் நினைத்தது நிறைவேற போகிறது என்ற எண்ணத்தில் ஆனந்தமாக அரண்மனைக்கு பயணிக்கின்றான். 


 அடுத்த நாள் அரண்மனை நீதிமன்றத்தில் மன்னரின் முன்னால் அவனை நிறுத்துகின்றனர்.


அப்பொழுது மன்னர், அமைச்சரே; சிறுவன் ஏதாவது சொன்னானா? எதற்காக வழியை மறைத்தான் என்று உங்களுக்கு தெரிந்ததா? என்றார்.


இல்லை மன்னா. ஒரு தகவலும் தெரியவில்லை. வந்ததில் இருந்து அவனை நாங்கள் கண்காணிக்கின்றோம். நீ செய்த செயலுக்காக உன்னை கைது செய்து இருக்கின்றோம் என்று பலமுறை கூறியும். அவனது முகத்தில மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவுமே பதிலாக எங்களுக்கு கிடைக்கவில்லை மன்னா. என்றார் அமைச்சர். 


அப்படியா! சிறுவனே உனது பெயர் என்ன? என்கின்றார் மன்னர்.


அன்று தொட்டு இன்று வரை மக்களின் அன்பிற்கு பாத்தியமான பாண்டிய மன்னரின் பாதங்களை வணங்குகின்றேன். எனது பெயர் தெய்வமுகன் அரசே.


நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கின்ற உன்னுடைய நாட்டின் அரசர் வலம் வருகின்ற பொழுது எதற்காக குறுக்கே நின்று மறைத்தாய். நீ செய்தது குற்றம் தானே? என்றார் மன்னர்.


நான் செய்தது குற்றம் தான் மன்னா. நன்மையின் பொருட்டு நாம் சொல்கின்ற பொய் மற்றும் செயல்கள் குற்றமாகாது என்று எனது ஆசான் கூறியிருக்கிறார்களே மன்னா. என்றான் சிறுவன்.


உன்னால் என்ன நன்மை நாட்க்கு? நீ என்ன செய்தாய் இதுவரை நாட்டுக்காக? என்றார் மன்னர்.


இதுவரை நான் முறையாக கல்வி பயின்றேன். இனிமேல் தான் மன்னா நாட்டுக்காக உழைக்க இருக்கிறேன். அதுவும் நீங்கள் அனுமதி தந்தால் நாட்டில் நடக்கும் தவறுகளை இப்பொழுதே உங்கள் கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன் மன்னா. என்றான் சிறுவன்.


 அமைச்சரே.. நாட்டில் அப்படி என்ன தவறு நடக்கிறது சொல்லுங்கள். என்றார் மன்னர்.


நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ்கின்றனர். இப்பொழுது வரை சட்டத்துக்கு புறம்பான செயல்கள் இல்லை மன்னா. அப்படி எதுவும் நடந்தால் உங்களது பார்வையில் இருந்து தப்ப முடியுமா என்றார் ஒரு அமைச்சர்.


அரண்மனைக்குச் சென்றால் நல்ல உணவு கிடைக்கும் என்று யாராவது இந்தச் சிறுவனிடம் சொல்லி இருப்பார்கள். அதனால் தான் இங்கு வந்து ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான் மன்னா.


நமது நாட்டில் அனைவரும் நல்ல உணவு தானே இப்பொழுது வரை கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்க, நீங்கள் இப்படி சொல்வதற்கான காரணம் என்ன?!

என்று சொல்லிய மன்னர்... 


யோசித்தபடி ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த மன்னர் அவனிடமே கேட்டார். 


நீயே சொல். நாட்டில் எனது கவனத்திற்கு வராமல் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்றார் மன்னர்.


மன்னிக்கவும் மன்னா, உங்கள் கவனத்திற்கு வராதவற்றை எல்லாம் என்னால் கூற இயலாது. 


நான் கூறுவது உங்கள் கவனத்திற்கு வந்ததா? இல்லையா? என்பதனை தாங்கள் தான் சொல்ல வேண்டும் மன்னா... 


நமது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து, பாறைகளை பளபளப்பாக மாற்றி மற்ற நாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்கிறார்கள் மன்னா.


அமைச்சர் உடனே குறுக்கிட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை மன்னா. ஆலயங்கள் கட்டுவதற்காக சில பாறைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன அவ்வளவுதான் மன்னா என்றார்.


மன்னர்: அமைச்சர் கூறுவதை பார்த்தால், இந்த தகவல் தங்களது கவனத்திற்கு வரவில்லை. சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.


அமைச்சர் தவறான தகவலை சொல்லுகிறார். அங்கு வேலை செய்யும் நபர்களோடு இரண்டு நாள் தங்கியிருந்தேன் அப்பொழுதுதான் எனக்கு இந்த செய்தி தெரிந்தது மன்னா. நான் சொல்லுகின்ற செய்திகளுக்கு ஆதாரம் இருக்கிறது மன்னா. என்றான் தெய்வமுகன்.


மலைகள் அடுத்த தலைமுறையின் சொத்து. அதனை பாதுகாக்க வேண்டியது நிகழ்காலத்தில் வாழும் அனைவரின் பொறுப்பு. மலைகளை உடைத்து விற்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது. 


இந்த அமைச்சரை சிறையில் அடையுங்கள். பாறைகளை உடைக்கிறவர்கள், பாறைகளை வாங்கியவர்கள் இரண்டு குழுக்களை சார்ந்தவர்களையும் கைது செய்து அழைத்து வாருங்கள்...


காவலாளிகளே சிறுவன் அரண்மனையில் தங்குவதற்கு ஒரு அறை ஏற்பாடு செய்து கொடுங்கள். 


 கைது செய்யப்பட்டவர்கள் வந்தவுடன் நாளை விசாரணை தொடரும்... என்று சொல்லிச் சென்றார் மன்னர்.



நன்றி.


கட்டுரையாளர்,

க.நாகநாதன்,

செய்தி தொடர்பாளர்,






திங்கள், 24 ஜூலை, 2023

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Subhash Chandra Bose

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897  இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

{இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து  விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.}


பிறப்பு

இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில், 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள், வங்காள, இந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.

கல்வி

இளமையில் சுபாஷ் சந்திர போஸ்

ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.

அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன்; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.


துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.

இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

மக்கள் சேவைப் பணி

நேதாஜியின் வீடு

அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, லண்டனுக்கு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920 இல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.

சுதந்திரப் போரில் ஈடுபாடு

வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.

இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்துஇந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 இல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.

அரசியல் நுழைவு[தொகு]

1922 இல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.[14]

இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேருசித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம்வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.

காங்கிரசில் பிளவு[தொகு]

இடையில் சில காரணங்களுக்காகப் போராட்டத்தை நிறுத்தியதால், காந்திக்கு எதிராக, பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ்கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்டசபைத் தேர்தல்களில், இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய விடுதலையை \விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாசும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால், இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாசுக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரசில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர, "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, ஆசிரியர் பொறுப்பை போசிடம் ஒப்படைத்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1928 இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்து, காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், காங்கிரசு காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் சனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போசின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும்ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.

அரசியல் பணி

காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து, தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும், கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாசும், மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போசும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.[15] கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, காந்தியுடன்; இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்த கூட்டத்தின்போது, 1938

இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 அக்டோபர் 25 ஆம் நாள், கைது செய்து, கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியைக் கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும், அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்படப் பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு, 'சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை' எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.

போசிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரித்தானிய அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.[16] நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாசும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, "கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும், "இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்யத் தயார்" என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.

இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும், "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார்" என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனிப் பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.[17] 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல்

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர்.[18] எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

ஹைன்ரிச் ஹிம்லருடன் சுபாஷ் சந்திர போஸ்

தலைமறைவு

1941 சனவரி 26 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.[19][20][21]

1941 சனவரி 15 ஆம் நாள், நேதாஜி ஒரு முசுலிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போதைய பாக்கித்தானில்) அடைந்து, இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானித்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். உருசியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக, செருமனிக்கு வருமாறு இட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து செருமனியத் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் செருமனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி செருமனிப் பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற செய்தி பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.  செருமனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இட்லரை நேதாஜி சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக இட்லர் உறுதி அளித்தார்.


சுதந்திர இந்திய இராணுவம்[தொகு]

நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ மடகாசுகின் தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943

1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.[26][27] அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:[28]

சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், செருமனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய விடுதலைக்கான போர், ஐரோப்பாவில் இட்லராலும், ஆசியாவில் சப்பானும் மறைமுகவாகவேனும் பிரித்தானியாவிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரித்தானியரின், 'வெளியேறுவது' என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் 'இந்தியாவை விட்டு வெளியேறுவது' என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

திருமணம்

1933 பிப்ரவரி 13 இல், உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியாபோலந்துஅங்கேரிஇத்தாலிசெருமனி எனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை, போஸ் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29 இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.[29][30]

கொள்கை

போஸ், 'இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும்' என்ற உறுதியுடன், அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில், இந்திய காங்கிரஸ் சபை, 'படிப்படியாக விடுதலை பெறுவதை' ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில், பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக, இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.

போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். 'காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது' என்றும், 'பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி' என்றும் கருதினார். இவர் ஃபார்வர்ட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். 'இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்' என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம்நாட்சி ஜெர்மனிசப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்காசியாவில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.

அரசியல் தத்துவம்

சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார்.[31] அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார்.

சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.

பெண்ணுரிமை

இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான 'ஜான்சி ராணி படை'யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது..[35]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

இரண்டாம் உலகப்போரில், செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு, அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து, அதை ஆகத்து 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காக்கில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி, நேதாஜி, பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து, அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகத்து 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் [36]. ஆகத்து 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம், ஆகத்து 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில், போஸ் இறந்ததாக அறிவித்தது. ஆனால் தைவான் நாடு, அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.

ரெங்கோயி கோயில், யப்பான்

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. 'நேதாஜி இறந்துவிட்டார்' என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர், அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும், சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இரகசியத் துறவி

உத்திரப் பிரதேசத்தில், 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி, அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள், அத்துறவி, போஸ்தான் என நம்பக் காரணமாகின. அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இவை, பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார். ஆயினும், முகர்ஜி ஆணையம், மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதே வேளை, இந்திய அரசின், 'போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது' என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.

இறுதி உரை

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,

பாரத ரத்னா விருது

1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

இரகசிய ஆவணங்கள்

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது


ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...