அறிவை வளர்
பாரடா தம்பி பாரடா
பாரத பூமியை பாரடா – (நம்)
பாட்டன் ஆண்ட பூமிடா – (இதை)
பத்திரமாய் மீட்பதிங்கு யாரடா
நாட்டின் வளங்களை பாரடா
இதில் வறுமை வந்தது ஏனடா
நல்லவர் கூட்டம் எங்கடா
நால்வர்ணம் செய்த பிழையடா
(நால்வர்ணம் செய்த சதியடா)
கேளடா தம்பி கேளடா - உன்
கேள்வி அறிவால் கேளடா
அறிவை மிஞ்சியவர் யாருடா
அதை வளர்க்க வழி தேடடா!!
உலகைப் புரிந்துகொள்ள வேண்டும்
உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும்
அறிவு விரிந்து செல்ல வேண்டும்
பார்வை கனிந்து செல்ல வேண்டும்
மனதில் உறுதி கொள்ள வேண்டும்
மனிதம் உன்னால் வாழ வேண்டும்
மகுடம் தன்னாலே வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக