சனி, 19 ஆகஸ்ட், 2023

பூலித் தேவர் வரலாறு

பூலித் தேவர் 

"பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்" 


 முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவர் அவர்கள் நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது.


பெற்றோர் சித்திரபுத்திர தேவர் சிவஞான நாச்சியார். 1715 செப்.1ல் பிறந்தார் ‘காத்தப்ப பூலித் தேவர்’. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர். 


தமிழ் இலக்கண, இலக்கிய நூல் கற்று கவிதை எழுதும் திறம் பெற்றார்.


பன்னிரண்டு வயதில் போர்ப் பயிற்சி பெற்று  குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் என அனைத்து வீர விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.


புலிகளுடன் விளையாடுவதிலும் புலித்தோல் புலி நகம் அணிவதிலும் பெரு விருப்பம் இருந்ததால் புலித்தேவர் என்றும் அழைத்துள்ளனர். 


அவரது பெற்றோர் காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 லேயே பட்டம் சூட்டி மன்னராகினார்கள்.


பின்னர் பூலித்தேவர் மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை  திருமணம் செய்தார்.அவர்களுக்கு கோமதிமுத்துத் தலவாச்சி, சித்திரபுத்திர தேவன், சிவஞான பாண்டியன் என மூன்று மக்கள் பிறந்தனர்.


பூலித்தேவர் காலத்தில்தான் நாயக்கர் ஆட்சி நலிவுற்று பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுற்று ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயர் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. 


அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்றுகூட்டி பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பூலித்தேவர்.அவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர்.


ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார் ஆற்காடு நவாப். அது முதல், ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களுடன் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்.

மாபூஸ்கான், கர்னல் ஹெரான் இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக ஆங்கிலேயரின் தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. அதன் பின் கோட்டையை விட்டு வெளியே வந்த பூலித்தேவன் ஆங்கிலப் படைகளை சின்னாபின்னமாக்கினார். இந்த முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து போர் வரும் அபாயத்தை உணர்ந்தார். மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த முயன்றார். ஆனால் அவர்களோ, தங்கள் அரசாட்சியே போதும் என சுயநலத்துடன் ஒதுங்கினர்.

அதன்பின்னர் பூலித்தேவர் அவர்கள் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்த சுதேசியப்படை என்ற ஒரு புதிய படையை ஏற்படுத்தி மருதநாயகத்திடம் (யூசுப்கான்)ஒப்படைத்தனர். யூசுப் கானே பின்னாளில் , ஆங்கிலேயருடன் இணைந்து, சுதேசிப் படையைக் கொண்டே பூலித்தேவரை எதிர்த்தார்.


1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.


மறைவு நாள் (10-08-1767)

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலி

சிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை

தியாக செம்மல் வ.உ.சி  

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை

கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.



வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. 


தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது. 


ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.


கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.


நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.


கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.


இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட

இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது. 


ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.


இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.




அப்போது, 

1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,

2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,

3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது. 

இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.


ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான். 


பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர். 


திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி அலெக்ஸ் ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார். 


இதற்குள் ஓர் இரகசியம்ஒளிந்து இருந்தது.

வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் ராஜினாமா செய்து ஓடினர். 

அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் விற்றுவிட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா கப்பலைவெள்ளையருக்கேவிற்றுவிட்டது தான்.


இதனை அறிந்த வ உ சி...


"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.


பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார் 

வ உ சி.

நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.


ஓங்கட்டும் வ.உ.சி புகழ்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

உண்மையை நீ தேடு - கவிதை

கனிமவளக் கொள்ளை

"உண்மையை நீ தேடு"

 

நாடு நல்ல நாடு 

நம்மளோட நாடு 

நல்லபடி வாழணுமா 

உண்மையை நீ தேடு!


பார்ப்பதற்கு

பசுமையானால்

 பயிராகுமா!



படங்களிலே 

பழம் இருந்தால் 

பசிக்காகுமா!


பண்புகெட்டவன் 

பதவி ஏறினால்

 நீதி கிடைக்குமா!


வாழ்க வாழ்க 

என்று சொன்னால் 

வறுமை ஒழியுமா!


களவுபோன 

மலைகள் தான் 

காட்சி கொடுக்குமா!


காடு மலையை

காக்காதது 

அரசாகுமா!


அதை கண்டுக்காமல் 

கடப்பவன் 

மனிதன் ஆகுமா


பக்தன் வேடம் 

போட்டு விட்டால் 

பக்தியாகுமா!


தேசபக்தன் என 

சொல்லி விட்டால் 

தேசம் வளருமா!


தெருவுக்கெல்லாம் 

தேசத் தலைவர் 

பெயர் வேண்டுமா

தேம்பி அழும் 

குழந்தைக்கு சோறு 

வேண்டாமா!!


அவள் நினைவே சுகமாகும் - கவிதை

 அவள் நினைவே சுகமாகும்

பூ ஒன்னு அங்கு இருக்க 

தேன் வந்து இங்கு சுரக்க

 நித்திரையில் தேன் குடிக்க

உன் நினைவில் நான் துடிக்க


சொப்பனத்தில் வந்தவளே 

சொக்குப்பொடி போட்டியடி 

சொர்க்கமே நீ தானு

சொல்லாமல் சொன்னியேடி


 பெண்ணழகு எல்லாம் 

உன் வடிவில் கண்டேனே 

பேச மொழியின்றி 

பேதையாக சென்றேனே  - உன்

அழகுக்கு முன்னாடி 

அடிமையாகி நின்றேனே


மணம் வீசாத மல்லிகை பூ - வரதட்சிணை கொடுமை - கவிதை

 “மணம் வீசாத மல்லிகை பூ”

மோகம் கொண்ட மேனி இது 

சோகத்தில் வாடுது

தூது சென்ற மேகம் எல்லாம் 

தூசியா போகுது


தண்ணிக்குள்ள நானிருந்தும்

தேகம் தாகத்தில வாடுது

தங்கம் இன்றி போனாதால் 

தாலிக்கு ஏங்குது


ஆசை வந்து அசைக்கிது 

அடி மனசு அழுவுது 

காசின்றி போனதால 

கண்ணீர் வடியுது


பூச்சூடும் நாள் எல்லாம் 

பூ வாசம் பிடிக்கவில்லை

பூவாக நான் இருந்தும் 

வாசனை வீசவில்லை


வாசலுக்கு வந்தவுக 

வாசனையை பாக்கலையே 

வசதிய பார்த்தாக 

வண்டியத்தான் கேட்டதாக


பூக்கும் முன்னால பூச்சூடி இருந்தேனே

பூத்த பின்னால பூநாகம் ஆனேனோ!!


மோகம் கொண்ட மேனி இது 

சோகத்தில் வாடுது

தூது சென்ற மேகம் எல்லாம் 

தூசியா போகுது


அறிவை வளர் - கவிதை

  அறிவை வளர் 

பாரடா தம்பி பாரடா 

பாரத பூமியை பாரடா (நம்)

பாட்டன் ஆண்ட பூமிடா (இதை)

பத்திரமாய் மீட்பதிங்கு யாரடா


நாட்டின் வளங்களை பாரடா 

இதில் வறுமை வந்தது ஏனடா

நல்லவர் கூட்டம்  எங்கடா 

நால்வர்ணம் செய்த பிழையடா

(நால்வர்ணம் செய்த சதியடா)


கேளடா தம்பி கேளடா  - உன்

கேள்வி அறிவால்  கேளடா

அறிவை மிஞ்சியவர் யாருடா 

அதை வளர்க்க வழி தேடடா!!


உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் 

உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும்

அறிவு விரிந்து செல்ல வேண்டும் 

பார்வை கனிந்து செல்ல வேண்டும்

மனதில் உறுதி கொள்ள வேண்டும் 

மனிதம் உன்னால் வாழ வேண்டும் 

மகுடம் தன்னாலே வர வேண்டும்.


சனி, 5 ஆகஸ்ட், 2023

எண்ணுவது கைக்கெட்டும்

 எண்ணுவது கைக்கெட்டும்


"வெள்ள தலையணை மலர் நீட்டும் மாந்தர்தம் உள்ளத்தினை உயர்வு"


குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம் என்பது அந்தக் குளத்தின் நீர் மட்டம் எவ்வளவு இருக்கிறதோ அதுதான் குளத்தில் இருக்கின்ற தாமரையின் உயரம். அதைப் போன்று ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இருக்கின்ற எண்ணத்தின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையின் உயரம் நிர்ணயிக்கப்படுகின்றது.  


நம் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த இடத்தில் இருந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், முதலில் இலக்கை தீர்மானிக்க வேண்டும். இலக்கை தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களது இலக்கையே தவறாக தீர்மானித்து விடுகின்றனர்.  


மயில் ஆடுவதை பார்த்து வான்கோழி தானும் தொகை விரித்து மயில் போல ஆட வேண்டுமென ஆசைப்பட்ட கதையாக இருக்கக்கூடாது. பல சமயங்களில் சிலரை பார்த்து தவறான ஒன்றை இலக்காக தீர்மானித்து முயற்சித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிக்கின்றனர். 


ஓர் இலக்கை தீர்மானிப்பதற்கு முன்னால், நான் எந்த இடத்தில் இருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எதனை கடந்து வந்திருக்கிறேன்? என்னை சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள்? நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? இது போன்ற கேள்விகளை தனக்குத்தானே உருவாக்கி அதற்கு பதிலும் அளித்துக் கொள்ள வேண்டும்...


அதன் பிறகு இலக்கை தீர்மானியுங்கள். நமக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அந்தத் தெளிவு நம்மை இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும். நாளைய இலக்கை அடைவதற்காக தினந்தோறும் பணிகளுக்கு இடையே சிறுதேனும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். 


*எதற்கும் தயாராக இருங்கள்*

உங்களை சுற்றி இருப்பவர்களிடமிருந்து சற்று விலகி, உங்களுக்கென ஒரு இலக்கை தீர்மானித்த பின்பு எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியமான ஒன்று. உங்களது எண்ணம் இலக்கை நோக்கி பயணிக்க துவங்கியவுடன், உங்களுடைய இலக்குடன் தொடர்புடைய பல்வேறு நபர்களை உங்களுக்கு இயற்கை அறிமுகப்படுத்தும் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள், நான் எதையும் சரியாக செய்து முடிப்பேன்! என்ற முனைப்போடு எதையும் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 


மண்ணில் விதைக்கப்பட்ட விதை பல நாட்களாக நீரின்றி அப்படியே கிடைக்கின்றது. ஒருநாள் இரவு மழை பெய்கின்றது. மழை நீரை ஆதாரமாகக் கொண்டு வேர் விட்டு முளைக்க ஆரம்பிக்கின்றது. விதை எப்பொழுதும் தயாராக இருந்தது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது புதிய பயணத்தை தொடங்கியது. விதை போல தயாராக இருங்கள்.


சுய ஒழுக்கத்தோடும், நல்ல எண்ணங்களோடும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அதற்கான நற்பலனை தந்து கொண்டே இருக்கும்.

தனித்துவமானவர்களின் செயலும், பெயரும் ஒரு நாள் தலை நிமிர்ந்து நிற்கும்!. 


செயல்படுத்தி பாருங்கள். நீங்களும் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். 


"எதுவரை உன் செயலும்

 உன் பெயரும் தெரியுமோ 

 அதுவரை 

 உன் பேச்சு கவனிக்கப்படும்! 

 

எவருக்கெல்லாம் உன் செயலும் 

உன் பெயரும் தொரியாதோ 

அவருக்கெல்லாம் 

ஆயிரம் சத்தத்தில் அதுவும் ஒன்றாம்"


உங்கள் குரல் எதுவரை கேட்கும்?

நீங்கள் நினைக்கும் இடமெல்லாம் கேட்ட வேண்டும்!!

.


*குட்டிக்கதை*

       தென்பாண்டி நாட்டில் ஒரு சிற்றூரில் ஒரு இளம்சிறுவன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் எப்படியாவது நாம் அரண்மனைக்குச் சென்று அங்கு வாழ வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டுக் கொண்டே இருந்தான்.


 தந்தையோ விறகு வெட்டும் தொழிலாளி. தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. மனதில் தெளிவான சிந்தனையோடு அரண்மனைக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் சிறுவன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். 

 

 இங்க பாரு, அரண்மனையில் வாழ வேண்டும் என்றால் ஒன்னு மன்னர் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ இருக்க வேண்டும். இதில் எந்த இடத்திலும் நாம் இல்லை. நாம் அங்கு செல்லவும் முடியாது. என்றார் சிறுவனின் தந்தை.


 நான் அமைச்சராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகவேண்டும். 

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அப்பா. என்றான் சிறுவன்.


அதை சோல்லும் அறிவு எனக்கு இல்லை. நீ படிக்கின்ற இடத்தில்தானே அமைச்சர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர். அதனால் உங்கள் ஆசானுக்கு இந்த கேள்விக்கு பதில் நன்றாகத் தெரியும். உங்கள் ஆசானிடம் கேட்டுத்தெரிந்துகொள். இருந்தாலும்... இப்படிப்பட்ட ஆசை உனக்கு தேவையில்லை... என தயங்கியபடி சொன்னார் சிறுவனின் தந்தை. 


 நீங்கள் தேவை அற்றதை பேசி என் நேரத்தை வீனடிக்காதீர்கள் அப்பா. நான் என் ஆசானை பார்த்துவிட்டு வருகிறேன். சொல்லிச் சென்றான் சிறுவன்.


ஆசான் இருப்பிடத்துக்கு சென்ற சிறுவன் தன் எண்ணத்தை அனைத்தையும் தன் ஆசானிடம் சொன்னான். அதனைக் கேட்ட ஆசான் கண்டிப்பாக நீ அரசவையில் பணியாற்ற முடியும். நான் சொல்லும் கருத்துக்களை நினைவில் வைத்துக்கொள்.

1. சொல் அறிந்து சொல் 

2. இந்த கனத்தில் வாழ் 

3. உனக்குள் தோன்றும் நல்ல எண்ணங்கள் நீ செய்வதற்காகவே வருகிறது. 

4. இது உனக்கான வாழ்கை அதை நீதான் கட்டி எழுப்ப வேண்டும். 

இந்தை சரியாக பயன்படுத்து. 


பத்து ஆண்டுகள் திறம்பட கல்வி கற்ற நீ, இன்று முதல் உன்னை அமைச்சராக நினைத்துக்கொள். ஒரு மாதம் நாட்டைச் சுற்றிவந்து நிறை, குறைகளை என்னிடம் சொல். எந்த சூழலிலும் உன் எண்ணத்தை பிறரிடம் சோல்லாதே.. எனக் கூறி அனுப்பிவைத்தார் ஆசான்.


ஆசான் வழிகாட்டிய படி நாட்டின் ப‌ல்வேறு பகுதிகளுக்கும் சென்று குறிப்பு எடுத்துக்கொண்டான். 

ஒரு மாதமும் கடந்துவிட்டன.


 காலம் தாமதிக்காமல் ஆசானிடம் சென்றான். தான் குறித்து வைத்திருந்த நாட்டின் நிறை குறைகளை ஆசானிடம் கூறினான். 


நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது உனது குறிப்புகள். அரண்மனையில் உனக்கென ஒர் இடம் உள்ளது. உன் திறமையால் மன்னரை நீ சந்திக்க வேண்டும். நீ உள்வாங்கிய வற்றில் குறையை மன்னரிடம் சொல். நிறையை அமைச்சரிடம் சொல். நல்ல மனிதனாக மக்களிடம் செல். என்று கூறி அனுப்பினார் ஆசான்.


சிறுவன் விட்டுக்கு வந்தான். 


 நான் நமது மன்னரை சந்திக்க வேண்டும் ஏதாவது ஒரு வழிசொல்லுங்கள் அப்பா? என தொடர்ந்து கேட்டு நச்சரிசிக்கிட்டு இருக்க...


 அவனது அப்பா கோபமாக, மன்னர் நகர் வளம் வரும்பொழுது குறுக்கே சென்று சாலையின் நடுவே நின்று கொள். போ. மன்னரின் பாதுகாவலர்கள் உன்னை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அரண்மனைக்கு சென்ற பின்பு மன்னர் முன் உன்னை நேர் நிறுத்துவார்கள்.

 

  நீ சந்தித்து பேசுவியோ, சவுக்கு அடி வாங்குவியோ எனக்குத் தெரியாது.

 

தப்பிப்பது உன்னுடைய சாமர்த்தியம். என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றார்.


 சிறுவன் யோசித்தான். இப்படி செய்ய முடியுமா? செய்யலாமா? இப்படி செய்தால் அரசனிடம் பேச முடியுமா? என்று சிறிய யோசனைக்குப் பிறகு மன்னர் வரும் வழியில் குறுக்கே நிற்பதாக முடிவு எடுத்தான்.


மன்னர் எப்பொழுது வருவார் என காத்துக் கொண்டிருந்தான்.


சில தினங்கள் கழித்தன. சிறுவனின் பக்கத்து நகரத்திற்கு மன்னர் வருகிற செய்தி அறிந்த சிறுவன் தயாராக இருந்தான். அந்த நகரின் சாலை வழியாக மன்னர் வருகிற செய்தி அறிந்ததும் மக்கள் அனைவரும் சாலையை விட்டு ஓரமாக ஒதுங்கி நிற்கிறார்கள். இவன் மட்டும் சாலையை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தான். 


மன்னரின் தேர் காவலர்கள் சத்தமிட்டு ஒதுங்கும்படி சொல்கிறார்கள். ஆனால், இவன் சாலையை விட்டு நகர்வதாக இல்லை.


 மன்னர் நகர் வலம் வரும் பொழுது வழியில் இடைமறித்து நின்ற குற்றத்திற்காக உன்னை கைது செய்கிறோம் எனக் கூறி, தேர் காவலாளிகள் சிறுவனை சிறை பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

அரண்மனை வாகனத்தில் பயணிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் சிறுவன் பயணித்துக் கொண்டிருந்தான்.


சிறுவனை கைது செய்து அழைத்துச் செல்வதை கண்ட, அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் கவலையோடு இருந்தனர். ஆனால் சிறுவனோ நாம் நினைத்தது நிறைவேற போகிறது என்ற எண்ணத்தில் ஆனந்தமாக அரண்மனைக்கு பயணிக்கின்றான். 


 அடுத்த நாள் அரண்மனை நீதிமன்றத்தில் மன்னரின் முன்னால் அவனை நிறுத்துகின்றனர்.


அப்பொழுது மன்னர், அமைச்சரே; சிறுவன் ஏதாவது சொன்னானா? எதற்காக வழியை மறைத்தான் என்று உங்களுக்கு தெரிந்ததா? என்றார்.


இல்லை மன்னா. ஒரு தகவலும் தெரியவில்லை. வந்ததில் இருந்து அவனை நாங்கள் கண்காணிக்கின்றோம். நீ செய்த செயலுக்காக உன்னை கைது செய்து இருக்கின்றோம் என்று பலமுறை கூறியும். அவனது முகத்தில மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவுமே பதிலாக எங்களுக்கு கிடைக்கவில்லை மன்னா. என்றார் அமைச்சர். 


அப்படியா! சிறுவனே உனது பெயர் என்ன? என்கின்றார் மன்னர்.


அன்று தொட்டு இன்று வரை மக்களின் அன்பிற்கு பாத்தியமான பாண்டிய மன்னரின் பாதங்களை வணங்குகின்றேன். எனது பெயர் தெய்வமுகன் அரசே.


நாட்டு மக்கள் பெரிதும் மதிக்கின்ற உன்னுடைய நாட்டின் அரசர் வலம் வருகின்ற பொழுது எதற்காக குறுக்கே நின்று மறைத்தாய். நீ செய்தது குற்றம் தானே? என்றார் மன்னர்.


நான் செய்தது குற்றம் தான் மன்னா. நன்மையின் பொருட்டு நாம் சொல்கின்ற பொய் மற்றும் செயல்கள் குற்றமாகாது என்று எனது ஆசான் கூறியிருக்கிறார்களே மன்னா. என்றான் சிறுவன்.


உன்னால் என்ன நன்மை நாட்க்கு? நீ என்ன செய்தாய் இதுவரை நாட்டுக்காக? என்றார் மன்னர்.


இதுவரை நான் முறையாக கல்வி பயின்றேன். இனிமேல் தான் மன்னா நாட்டுக்காக உழைக்க இருக்கிறேன். அதுவும் நீங்கள் அனுமதி தந்தால் நாட்டில் நடக்கும் தவறுகளை இப்பொழுதே உங்கள் கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன் மன்னா. என்றான் சிறுவன்.


 அமைச்சரே.. நாட்டில் அப்படி என்ன தவறு நடக்கிறது சொல்லுங்கள். என்றார் மன்னர்.


நாட்டில் எல்லோரும் நன்றாக வாழ்கின்றனர். இப்பொழுது வரை சட்டத்துக்கு புறம்பான செயல்கள் இல்லை மன்னா. அப்படி எதுவும் நடந்தால் உங்களது பார்வையில் இருந்து தப்ப முடியுமா என்றார் ஒரு அமைச்சர்.


அரண்மனைக்குச் சென்றால் நல்ல உணவு கிடைக்கும் என்று யாராவது இந்தச் சிறுவனிடம் சொல்லி இருப்பார்கள். அதனால் தான் இங்கு வந்து ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான் மன்னா.


நமது நாட்டில் அனைவரும் நல்ல உணவு தானே இப்பொழுது வரை கிடைத்துக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்க, நீங்கள் இப்படி சொல்வதற்கான காரணம் என்ன?!

என்று சொல்லிய மன்னர்... 


யோசித்தபடி ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த மன்னர் அவனிடமே கேட்டார். 


நீயே சொல். நாட்டில் எனது கவனத்திற்கு வராமல் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்றார் மன்னர்.


மன்னிக்கவும் மன்னா, உங்கள் கவனத்திற்கு வராதவற்றை எல்லாம் என்னால் கூற இயலாது. 


நான் கூறுவது உங்கள் கவனத்திற்கு வந்ததா? இல்லையா? என்பதனை தாங்கள் தான் சொல்ல வேண்டும் மன்னா... 


நமது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து, பாறைகளை பளபளப்பாக மாற்றி மற்ற நாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்கிறார்கள் மன்னா.


அமைச்சர் உடனே குறுக்கிட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை மன்னா. ஆலயங்கள் கட்டுவதற்காக சில பாறைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன அவ்வளவுதான் மன்னா என்றார்.


மன்னர்: அமைச்சர் கூறுவதை பார்த்தால், இந்த தகவல் தங்களது கவனத்திற்கு வரவில்லை. சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது என்று நினைக்கிறேன்.


அமைச்சர் தவறான தகவலை சொல்லுகிறார். அங்கு வேலை செய்யும் நபர்களோடு இரண்டு நாள் தங்கியிருந்தேன் அப்பொழுதுதான் எனக்கு இந்த செய்தி தெரிந்தது மன்னா. நான் சொல்லுகின்ற செய்திகளுக்கு ஆதாரம் இருக்கிறது மன்னா. என்றான் தெய்வமுகன்.


மலைகள் அடுத்த தலைமுறையின் சொத்து. அதனை பாதுகாக்க வேண்டியது நிகழ்காலத்தில் வாழும் அனைவரின் பொறுப்பு. மலைகளை உடைத்து விற்பதற்கு எந்த அனுமதியும் கிடையாது. 


இந்த அமைச்சரை சிறையில் அடையுங்கள். பாறைகளை உடைக்கிறவர்கள், பாறைகளை வாங்கியவர்கள் இரண்டு குழுக்களை சார்ந்தவர்களையும் கைது செய்து அழைத்து வாருங்கள்...


காவலாளிகளே சிறுவன் அரண்மனையில் தங்குவதற்கு ஒரு அறை ஏற்பாடு செய்து கொடுங்கள். 


 கைது செய்யப்பட்டவர்கள் வந்தவுடன் நாளை விசாரணை தொடரும்... என்று சொல்லிச் சென்றார் மன்னர்.



நன்றி.


கட்டுரையாளர்,

க.நாகநாதன்,

செய்தி தொடர்பாளர்,






ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...