வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சர்க்கரை நோயினால் ஏற்படும் ஆறாத ரணம், குழிப்புண்களை ஆற்றி குணப்படுத்தும் மூலிகை தைலங்கள்

 *ஜகத்குரு ஐயா அவர்களின் சிறப்பு மருந்துகள் - சர்க்கரை நோயினால் ஏற்படும் ஆறாத ரணம், குழிப்புண்களை ஆற்றி குணப்படுத்தும் மூலிகை தைலங்கள்*


 *புண்களை சுத்தம் செய்யும் முறை* முதலில் திரிபலா கஷாயம் அல்லது படிகார நீர் அல்லது தேங்காய் பால் கொண்டு புண்களை சுத்தம் செய்ய வேண்டும். 

_தேங்காய் பால் கொண்டு சுத்தம் செய்தல் மிகச் சிறந்த முறையாகும்_

 

*தைலம் உபயோகிக்கும் முறை*

பிறகு பின்வரும் தைலங்களில் ஏதேனும் ஒன்றை கோழி இறகில் தொட்டு புண்கள் / ரணத்தின் மேல் மென்மையாக தடவி சிறு துணி கொண்டு கட்டி விட வேண்டும். இதை தினமும் காலை, மாலை, இரவு என மூன்று முறை மேல் பூச்சாக தடவி வந்தால் ‌. விரைவில் ரணங்கள் ஆறி விடும்.  


 #கோபுரந்தாங்கி இலை தைலம்*


சுத்தமான 1 லிட்டர் புங்க எண்ணெயில் 1லிட்டர் கோபுரந்தாங்கி இலை சாற்றை கலந்து நன்கு காய்ச்சி எடுத்தால் _கோபுரந்தாக்கி இலை தைலம்_ தயார். 


*கிணற்றுப்பாசான் / வெட்டுக்காய பூண்டு இலைத் தைலம்*


1 லிட்டர் புங்க எண்ணெயில் 1லிட்டர் வெட்டுக்காய பூண்டு இலைச் சாற்றை கலந்து நன்கு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார்.


 *செவ்வரளி பூ தைலம்* 

2 கைப்பிடி செவ்வரளி பூக்களின் இதழ்களை 1 லிட்டர் புங்க எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார் . 


*ஆடுதீண்டாப்பாளை இலை தைலம்*


200கிராம் ஆடுதீண்டாப்பாளை இலை அரைத்த விழுதினை 1லிட்டர் வேப்ப எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார். 


*கொடுக்காப்புளி / கொடிக்காய் இலை தைலம்*


200 கிராம் கொடுக்காப்புளி இலை அரைத்த விழுதினை 1 லிட்டர் புங்க எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்தால் தைலம் தயார். 


*மேற்குறிப்பிட்ட வழி முறைகளை சரியாக பின்பற்றிளால் சர்க்கரை நோயினால் உண்டான எப்பேர்ப்பட்ட ரணங்களும் குழிப்புண்களும் ஆறிவிடும் என்பது உறுதி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...