வெள்ளி, 31 மே, 2024

இயற்கை வளம் காப்போம். தொடர்...

 


"அப்பா சீக்கிரமா வாங்கப்பா பஸ் புறப்பட போகுது"  என்றான் கண்ணன்.

" இதோ வந்துட்டேன் வந்துட்டேன். சீக்கிரமா கொடுங்க சில்லறையைப் பேருந்து போகப்போகுது" சில்லறையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக் கொண்டு வேகமாக பேருந்தில் ஏறினார். 

பேருந்தில் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் கண்ணன் சன்னலோரத்திலும் அவனுக்கு அருகில் அவனது தந்தையும் அமர்ந்து கொண்டு அவர்களது பயணத்தை துவங்கினார்கள். 

"அப்பா இந்த முறை எந்தெந்த இடமெல்லாம் சுற்றி பார்க்க போறோம்" என்றான் கண்ணன்.
" இந்தக் கோடை விடுமுறையில் உனக்கு உங்க அம்மா மூன்று நாள் சுற்றுலாவிற்காக அனுமதி கொடுத்திருக்கிறாள், இன்றிலிருந்து நான்காவது நாள் காலையில் இருவரும் வீட்டில் இருக்க வேண்டும்."  
டிக்கெட் டிக்கெட் என்று நடத்துனர் வருவதை கண்ட கண்ணன் "சரி சரி பேசுனது போதும் டிக்கெட் எடுங்க அப்பா" என்றான்.  

நடத்துனரிடம் "குற்றாலத்துக்கு  ரெண்டு டிக்கெட் கொடுங்க" என்றார் கண்ணனின் அப்பா".  
" சாயல்குடியிலும்  தூத்துக்குடியிலும் கொஞ்ச நேரம் நிக்கும் பரவால்லையா" என்றார் நடத்துனர்.  "சரிக கொடுங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல". 


"அப்பா, இந்த முறை எந்த எந்த ஊர்  சுத்தி பார்க்க போறோம்". 

"முதல்ல போயி குற்றால அருவியில் குளிக்கிறோம், அடுத்த நாள் காலையில கன்னியாகுமரி அங்கே நான்கைந்து இடம் பார்க்கிறோம், அதுக்கப்புறம் திருச்செந்தூர் முருகன் கோவில் அங்கிருந்து நேர ஊருக்கு போறோம்" என்றார் கண்ணனின் அப்பா.

கண்ணன் முகத்தில் சிறு அச்சத்துடன் "கன்னியாகுமரியா அங்கே எதுக்குப்பா? அங்கே நல்லவர்கள் எல்லாரையும் திமுகவை சேர்ந்த ரவுடிகள் வெட்டிக்கொள்கிறார்களாம் அப்பா" 

"யார்ரா சொன்னது உனக்கு" என ஆச்சரியமாக கேட்டார் அவனின் அப்பா. "எங்க கணக்கு டீச்சர் தான் சொன்னாங்க. அவங்க கன்னியாகுமரி தான்". 

"என்ன சொன்னாங்க?" "டீச்சர் சொன்னதை அப்படியே சொல்ல வா அப்பா"? 
"அப்படியே சொல்லு பாப்போம்" 

இந்த பாருங்க பசங்களா, அடுத்த வருஷம் பத்தாம் வகுப்பு போறீங்க படிப்பு ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் நம்ம வாழற நாடு, நம்மை சுற்றி இருக்கிற சூழல், நம்முடைய சுற்றுச்சூழல் சரிவர இருந்தால்தான் அதில் வாழும் மக்களாகிய நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.  என்னுடைய ஊர் கன்னியாகுமரி மாவட்டம், விலங்கோடு பக்கம். அங்கே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த மலையை வெடிவைத்து உடைத்து அள்ளிச் செல்கின்றார்கள் அண்டை மாநிலத்திற்கு (24×7) 24 மணி நேரமும் கடத்தல் பணி நடக்கிறது  அதுவும் அரசின் உதவியோடு என்பது தான் வேதனைக்குரிய செய்தி.

இதை தட்டிக் கேட்ட நல்ல மனிதனை கொலை செய்து விட்டார்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள்.

அப்பொழுது ஒரு பையன் கேட்டான் 'நீங்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரா?' என்று. ஏன் அப்படி கேட்கிறாய்?  என டீச்சர் கேட்டக. 

கேட்டவனுக்கு பக்கத்தில் இருந்தவன் "டீச்சர் உங்க அப்பா திமுக கவுன்சிலர்" என்றான். 

இந்த பாருப்பா நீ யாரை வேணாலும் இரு; இது பள்ளிக்கூடம் இங்கே அரசியலுக்கு வேலை இல்லை. இங்க பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆசிரியராய எனது கடமை.

 நீங்கள் எப்பொழுதும் நல்லவர்கள் பக்கம் நில்லுங்கள். சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நல்லவர்கள் பக்கம் நில்லுங்கள் என்று சொன்னாங்க.


பாகம் 2


*ஏன் இப்படி துர்நாற்றம் அடிக்கிறது*?

' மக்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கலாம் ஆனால் அரசியல் ஒரு நாளும் மக்களை விட்டு விலகி நிற்பதில்லை'
திரு.சீமான் அவர்கள் மக்களிடத்தில் இந்த வாசகத்தை அதிக மேற்கோள் காட்டுவார்.

அவர்கள் வந்த நேரம், பொதிகை மலையிலே இயற்கை மகள் இன்பமாக இருக்கிறாள். குற்றால சாரல் இருவரையும் தழுவியது. தந்தை மகனும் ஒட்டிக்கொண்டு அருவியை நோக்கி நடந்தார்கள். தந்தையும் மகனும் குற்றால அருவியிலே குளித்து குதூகலம் அடைந்தனர்.  

குற்றால அருவியின்  ஒரு பகுதியாகவே மாறிவிட்டான்.  அருவியின் நீர்த்துளி போல துள்ளித்துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் கண்ணன். 

இது நாள் வரை மழைக்காலத்தில் குளத்திலும் மற்ற காலத்தில் ஒரு குடம் நீரிலும் குளித்துக் கொண்டிருந்தவன், குற்றாலக் குளுமையிலும் அருவி நீரிலும் ஆனந்தம் அடைந்தான். 

"சீக்கிரமா வா. நம்ம கிளம்பி இருப்போம் முத்து நாலரை மணிக்கு வந்து விடுவான்" எனக் கூறி கண்ணனை உடைமாற்ற அழைத்து வந்தார் அவனது அப்பா.

தங்குமிடம் செல்வதற்கு தந்தை மகனும் தயாராக இருந்தார்கள். மணி 6 ஆகிவிட்டது தெருவிளக்குகள் தெரிய ஆரம்பித்து விட்டன ஆனால்... இவர்களை அழைத்துச் செல்வதற்காக முத்து இன்னும் வரவில்லை. 

குற்றால சாரலிலே இருந்தாலும் மனசுக்குள் கொஞ்சம் புழுக்கம் சிறிது எரிச்சலோடு அப்பா, முத்து மாமா அவருடைய காரை எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னிங்க, இவ்வளவு நேரமாக வருகிறார் என்றான் கண்ணன்.

"முத்து-ட பேசி விட்டேன். ஆட்டோ அனுப்புவதாக சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் வா போகலாம். அங்கே அவனுக்கு என்ன பிரச்சனையோ" என்றார் கண்ணனின் அப்பா.

ஒரு வழியா ஆட்டோ வந்து சேர்ந்தது. இருவரும் ஆட்டோவில் முத்துவின் தோப்பு விட்டுக்கு சென்றார்கள். 

 "இருட்டுவதற்கு முன்னால் ஆட்டோ வந்திருந்தால் செல்லும் வழியில் மலையையும் பசுமை நிறைந்த மரங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே வந்திருக்கலாம். இப்ப பாருங்க, நம்ம ஊரு வேலிக்கருவல் காட்டு பாதையில போவது மாதிரி இருக்கு முழுவதும் இருட்டா, கருப்ப தெரியுது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. என தனக்குள்ளே பேசிக்கொண்டான் கண்ணன். 

இருவரும் தோப்புக்கு வந்து சேர்ந்தனர். அங்கேயும் முத்துவை காணும். அவரது வேலையால் மட்டும் தான் இருந்தார். 

"என்ன அண்ணே, ஒரு மாதிரியா இருக்குறீங்க. எதையும் ஆட்டோவில் விட்டுட்டீங்களா" என்று கேட்டார் வேலைக்காரர்.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. முத்து இன்னும் பார்க்க வரவில்லை அதான் வேற ஒன்னும் இல்ல. நீங்க குற்றாலம் வந்தவுடன் என் வண்டியோட உங்க கூட இருப்பேன் கவலை வேண்டாம் என்றான் நேற்று. இன்று மதியம் முதல் இங்குதான் இருக்கிறோம். அளையே காணம்" என்றார் கண்ணனின் அப்பா.

"நீங்க ஒன்னும் தவறா நினைக்காதீங்க. முத்து அண்ணன் ஒரு முக்கியமான வேலையாக போய் இருக்காரு. இப்ப வந்துருவாங்க. உங்களுக்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் இங்கே செஞ்சு வச்சாச்சு. முத்து அண்ணனும் இரவு உங்களோடு தான் சாப்பிடுவதாக சொல்லி இருக்கிறார்" என்றார்  வேலைக்காரர். 

"அண்ணே இங்கே என்னென்ன மரங்கள் இருக்கிறது?" என்றான் கண்ணன்.

இங்கு.. மா மரம், பலா மரம், தென்னை மரம், வாழை இது நாலு தான் இந்த தோட்டத்தில் முக்கியமான வருமானம் மற்ற எல்லாம் கொஞ்சம் கொஞ்சம். எல்லாமே இயற்கை விவசாயம் தான்" என வேலைக்காரர் சொன்னார். 

தோப்புக்கு வடக்கு பக்கம் முத்துவின் பங்காளியுடைய இடம். அந்த இடத்தை கேரளாவை சேர்ந்த ஒரு சேட்டன் போன மாசம் வாங்கி விட்டார். அந்த இடத்தில் தான் பிரச்சனையை ஆரம்பமாய் இருக்கிறது.    

அந்த இடத்தில் இருந்து இடைவிடாத துர்நாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. எதனால் துர்நாற்றம் வருகிறது என்று சென்று பார்த்தால் அங்கே மருத்துவக் கழிவுகளையும், கோழிக்கறிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி வைத்திருக்கிறார்கள். இதை வைத்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் தரம் பிரிக்கிறோம் என்கிறார்கள். அதில் முற்றிய பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது. 

முதலில் முத்து காவல் நிலையம் சென்று சேட்டன்கள் மீது புகார் மனு கொடுத்தார். விசாரிப்பதாக சொல்லி அனுப்பினார்கள். 

இப்பொழுது பல நாட்களுக்கு மேலாகி விட்டது, இதுவரை விசாரிக்கவே இல்லை. ஆனால் தினமும் வாகனங்கள் குப்பையை ஏற்றி வந்து இங்கு கொட்டப்படுகின்றது.
என அனைத்து பிரச்சினைகளையும் கண்ணனின் அப்பாவிடம் சொன்னார் வேலைக்காரர்.

இரவு 8:30 மணிக்கு முத்து தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து இரவு உணவு அருந்தினார்கள். 


"முத்து, இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு ஒரு வார்த்தை கூட சொல்லலையே" எனக் கேட்ட கண்ணனின் அப்பா.

"எல்லாம் சரியாகிவிடும் என இருந்தேன். ஆனால், இங்கே 'அரண்மனை கோழி முட்டை அம்மிக்கல்லை உடைக்கும்' கதையாக இருக்கு. திராவிட மாடல் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் (திராவிட) நபர்கள் சொல்வது தான் சட்டமாக இருக்கிறது. 

காவல்துறை அதிகாரியே சொல்கிறார்,  இது மேலிடத்து உத்தரவு. தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை  தெலுங்கு, கன்னட, மலையாள மக்களை பாதுகாக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.   நங்கள் என்ன செய்யிறது என்கின்றார். 

"வெளிமாநிலத்தில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து இங்கே கொட்டுவது சட்டப்படி தவறு அதை சொல்ல வேண்டியது தானே" என்றார் கண்ணனின் அப்பா.

"காவல் நிலையத்தில் இதைத்தான் நானும் சொன்னேன். அதற்கு அங்கிருந்த நமக்கு வேண்டிய நபர் ஒருவர் சொன்னார் "அண்ணே தமிழ்நாட்டுல இதெல்லாம் திட்டமிட்டு நடக்குது. நேத்து நான்  சோதனை சாவடிக்கு தற்காலிக பணியில் இருந்தேன். அப்போது கோழி கழிவுகளை ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி வைத்தேன். அடுத்த நிமிடமே பெரிய பெரிய இடத்தில் இருந்து எல்லாம் அழைத்து வண்டியை தமிழ்நாட்டுக்குள் விடச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பிற மாநிலத்தில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதும், தமிழ்நிலத்து மலைகளை உடைத்து ஏற்றிச் செல்வதும் திட்டமிட்டு ஏதோ செய்கிறார்கள். தமிழர்களாகிய நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும் எனச் சொன்னார் அந்தக் காவலர். 

துர்நாற்றம் அடிப்பது இங்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே என்று புரிந்து கொண்டேன். 

துர்நாற்றத்தைப் போக்க வேண்டும் என்றால் அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்
நல்ல தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும்.

அரசியல் சாக்கடை என்று விலகிச் செல்லாமல் இந்த திராவிட சாக்கடையை அரசியலை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த நாம் தமிழராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

க.நாகநாதன் 
செந்தமிழர் பாசறை ஓமன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...