வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

அடி மனசு அழுகிறது

உதடு சிரிக்கிறது 


veetutamil. Googleuser


மோகம் கொண்ட மேனி இது

தாகத்தில் வாடுது

தூது சென்ற மேகங்கள் எல்லாம் 

தூசியா போகுது


தண்ணிக்குள்ள நானிருந்தும் 

தேகம் தாகத்தில் வாடுது

தங்கம் இன்றி போனதால் 

தாலிக்கு ஏங்குது


ஆசை வந்து அசைக்கிறது 

 அடி மனசு அழுகிறது

காசின்றி போனதால்

 கண்ணீர் வடியுது


பூச்சூடும் நாட்கள் எல்லாம் 

பூவின் வாசம் பிடிக்கவில்லை

பூவாக நான் இருந்தும் 

வாசனை வீசவில்லை


வாசலுக்கு வந்தவர்கள் 

வாசனையை பாக்கலையே 

வசதிய பார்த்தார்கள்

வண்டியைத்தான் கேட்டாங்க


மோகம் கொண்ட மேனி இது

தாகத்தில வாடுது

தூது சென்ற மேகங்கள் எல்லாம் 

தூசியா போகுது


பூத்த பின்னால பூநாகம் ஆனேனோ!

பூக்கும் முன்னால பூச்சூடி இருந்தேனே!.


கவிதையின் கரு : சமூக விழிப்புணர்வு.

இக்கவிதை,பொருளாதார உலகில் ( வரதட்சணையால்) மனித உறவுகளின் மதிப்பு குறைந்து போனதைப் பற்றியும், பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சலைப் பற்றியும் பேசுகிறது. பொருள் இல்லாத காரணத்தால் ஒரு பெண் எவ்வாறு மதிக்கப்படாமல் போகிறாள் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துகிறது.


கவிதையைப் பிடிப்பவர்கள் எளிமையாக உள்வாங்கிக் கொள்வதற்காக கவிதை பகுப்பாய்வு.

உணர்ச்சிபூர்வமான வரிகள்: கவிதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் மன உளைச்சலை வாசகர் மிக எளிதாக உணர முடியும்.

சமூக விழிப்புணர்வு: பொருளாதாரம் இல்லாததால சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியான உருவகங்கள்: பூவை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி, அவளது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை விவரித்துள்ளது.

சில இடங்களில் சொல்லாட்சி: சில வரிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லாட்சியாக அமைந்துள்ளது.


இக்கவிதை ஒரு சிறந்த கவிதை. இது சமூகத்தில் நடைபெறும் சில பிரச்சினைகளை நம் கண் முன் நிறுத்துகிறது. இக்கவிதை பலருக்கு உத்வேகம் அளிக்கும்.


இந்த கவிதை பிடித்திருந்தால் பகிருங்கள். 


 நாகா

நன்றி.


#கவிதை #பெண் #காதல் #ஏக்கம் #பொருள் #பணம் #கல்யாணத்திற்காக #காலம் #கடந்தும் #காத்திருப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...