புதன், 24 ஏப்ரல், 2024

பஞ்சகவ்யம் செய்முறை

 பஞ்சகவ்யம் செய்முறை 


தேவையான பொருட்கள்


நாட்டு மாட்டு சாணம் 10 kg


நாட்டு மாட்டு நெய்   1/4 லிட்டர்


நாட்டு சர்க்கரை   1 kg


தயிர் 6 லிட்டர்

 

பால்  6 லிட்டர்


கோமியம் 10 லிட்டர்


கற்றாழை ஜெயநீர் (கற்றாழை + கடுக்காய்) 2 லிட்டர்


வாழைப்பழம் 2 டஜன்


கரும்புச்சாறு (அ)பனங்கள் 4 லிட்டர்


செய்முறை


முதலில் நாட்டு மாட்டு சாணம் 10 kg மற்றும் நாட்டு சக்கரை 1kg உடன் 1/4 லிட்டர் நாட்டு மாட்டு நெய்யை கலந்து  பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தயிர் 6 லிட்டர் உடன் குரு மருந்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


 மூன்று நாட்களுக்குப் பிறகு நாட்டு மாட்டு சாண உருண்டைகளுடன் குரு மருந்து கலந்த தயிர், பால் ஆறு லிட்டர், கோமியம் 10 லிட்டர், கற்றாழை ஜெய நீர் 2 லிட்டர் மற்றும் இரண்டு டஜன் நன்கு பிசைந்த வாழைப்பழ கூழ் இளநீர் 4 லிட்டர் கரும்புச்சாறு அல்லது பனங்கள் நான்கு லிட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து 21 நாட்கள் அப்படியே வைத்து விட வேண்டும். இவற்றை வைப்பதற்கு உலோகப் பாத்திரம் உபயோகப்படுத்தக் கூடாது. மாற்றாக பிளாஸ்டிக் ட்ரம் பயன்படுத்த வேண்டும்.


 மேற்கண்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும். (டிரம்மின் பிலாஸ்டிக் மூடியை பயன்படுத்தக் கூடாது) தினசரி இரண்டு வேலை ஒரு மூங்கில் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். அவ்வாறு கலக்கிவிட பயன்படுத்திய மூங்கில் குச்சியை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.


 மேற்கண்ட கரைசலை தினமும் இரு வேலையும் 60 முறை வலப்புறம் மட்டுமே கலக்க வேண்டும். இடப்புறம் கலக்கக்கூடாது. 21 நாட்களுக்குப் பிறகு இந்த கரைசல் முழுமையாக தயாராகிய  பிறகு  உபயோகப்படுத்த தொடங்கலாம்.


முக்கிய குறிப்பு:

ஜெய நீர் என்று சொல்லக்கூடிய கற்றாழை ஜெய நீரை தயாரிக்கும் முறை.


தோல் பகுதியை நீக்கி விட்டு 2 கிலோ அளவு சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை மட்டும் எடுத்து மூன்று நான்கு முறை நன்றாக கழுவி பிளாஸ்டிக் டிரம்மில் வைத்துக் கொள்ளவும்.  இதனுடன் 200 கிராம் அளவு கடுக்காய் தூள் கலந்து நான்கு மணி நேரம் அப்படியே வைத்து விட அதிலிருந்து நீர் மட்டும் தனியாக பிரிந்து வரும். இந்த நீரே கற்றாழை ஜெய நீர். 

இந்தக் கற்றாழை ஜெய நீரை 2 லிட்டர் அளவு  பஞ்சகவ்வியத்துடன் சேர்க்க வேண்டும்.

நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...