வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நோட்டாவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரிய மனு மீது SC நோட்டீஸ் அனுப்பியது.


மேலும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட தடை விதிக்கப்படும் என்ற விதிகளை உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.


நோட்டா (மேற்கூறியவை எதுவும்) பெரும்பான்மையைப் பெற்றால், குறிப்பிட்ட தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கப்படுவதற்கான விதிகளை உருவாக்க உத்தரவிடக் கோரிய மனு மீது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  வெற்றிடமானது மற்றும் புதிய தேர்தல் தொகுதிக்கு நடத்தப்படும் என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ அறிவித்துள்ளது.





 நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என்றும் நோட்டாவை "கற்பனையான வேட்பாளராக" முறையான மற்றும் திறமையான அறிக்கையிடல்/வெளியீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில், ஒரு வாக்காளர் ஒரு குறிப்பிட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை வழங்க விரும்பினால், அவர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அதிகாரத்தை இந்த விருப்பம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது. 


புதன், 24 ஏப்ரல், 2024

பஞ்சகவ்யம் செய்முறை

 பஞ்சகவ்யம் செய்முறை 


தேவையான பொருட்கள்


நாட்டு மாட்டு சாணம் 10 kg


நாட்டு மாட்டு நெய்   1/4 லிட்டர்


நாட்டு சர்க்கரை   1 kg


தயிர் 6 லிட்டர்

 

பால்  6 லிட்டர்


கோமியம் 10 லிட்டர்


கற்றாழை ஜெயநீர் (கற்றாழை + கடுக்காய்) 2 லிட்டர்


வாழைப்பழம் 2 டஜன்


கரும்புச்சாறு (அ)பனங்கள் 4 லிட்டர்


செய்முறை


முதலில் நாட்டு மாட்டு சாணம் 10 kg மற்றும் நாட்டு சக்கரை 1kg உடன் 1/4 லிட்டர் நாட்டு மாட்டு நெய்யை கலந்து  பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தயிர் 6 லிட்டர் உடன் குரு மருந்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


 மூன்று நாட்களுக்குப் பிறகு நாட்டு மாட்டு சாண உருண்டைகளுடன் குரு மருந்து கலந்த தயிர், பால் ஆறு லிட்டர், கோமியம் 10 லிட்டர், கற்றாழை ஜெய நீர் 2 லிட்டர் மற்றும் இரண்டு டஜன் நன்கு பிசைந்த வாழைப்பழ கூழ் இளநீர் 4 லிட்டர் கரும்புச்சாறு அல்லது பனங்கள் நான்கு லிட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து 21 நாட்கள் அப்படியே வைத்து விட வேண்டும். இவற்றை வைப்பதற்கு உலோகப் பாத்திரம் உபயோகப்படுத்தக் கூடாது. மாற்றாக பிளாஸ்டிக் ட்ரம் பயன்படுத்த வேண்டும்.


 மேற்கண்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும். (டிரம்மின் பிலாஸ்டிக் மூடியை பயன்படுத்தக் கூடாது) தினசரி இரண்டு வேலை ஒரு மூங்கில் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். அவ்வாறு கலக்கிவிட பயன்படுத்திய மூங்கில் குச்சியை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.


 மேற்கண்ட கரைசலை தினமும் இரு வேலையும் 60 முறை வலப்புறம் மட்டுமே கலக்க வேண்டும். இடப்புறம் கலக்கக்கூடாது. 21 நாட்களுக்குப் பிறகு இந்த கரைசல் முழுமையாக தயாராகிய  பிறகு  உபயோகப்படுத்த தொடங்கலாம்.


முக்கிய குறிப்பு:

ஜெய நீர் என்று சொல்லக்கூடிய கற்றாழை ஜெய நீரை தயாரிக்கும் முறை.


தோல் பகுதியை நீக்கி விட்டு 2 கிலோ அளவு சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை மட்டும் எடுத்து மூன்று நான்கு முறை நன்றாக கழுவி பிளாஸ்டிக் டிரம்மில் வைத்துக் கொள்ளவும்.  இதனுடன் 200 கிராம் அளவு கடுக்காய் தூள் கலந்து நான்கு மணி நேரம் அப்படியே வைத்து விட அதிலிருந்து நீர் மட்டும் தனியாக பிரிந்து வரும். இந்த நீரே கற்றாழை ஜெய நீர். 

இந்தக் கற்றாழை ஜெய நீரை 2 லிட்டர் அளவு  பஞ்சகவ்வியத்துடன் சேர்க்க வேண்டும்.

நன்றி வணக்கம்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்

  முன்னோர்களின் வாழ்வியலில் தொடர்ந்து பழக்க வழக்கத்தில் உள்ள பழமொழிகள் இதை நாம் பயன்படுத்தினால் பாதி இயற்கை வாழ்வுகளுக்கு திரும்பியதாக அர்த்தம். இதோ உங்களுக்காக...

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...


🌝 தவளை கத்தினால் மழை 


🌝 அந்தி ஈசல் பூத்தால் 

அடை மழைக்கு அச்சாராம் 


🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை


🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 


🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 


🌝 தை மழை நெய் மழை


🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 


🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு


🌝 புற்று கண்டு கிணறு வெட்டு


🌝 வெள்ளமே ஆனாலும் 

பள்ளத்தே பயிர் செய் 


🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு


🌝 களர் கெட பிரண்டையைப் புதை 


🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 

கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு


🌝 நன்னிலம் கொழுஞ்சி 

நடுநிலம் கரந்தை 

கடை நிலம் எருக்கு


🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 

பருவம் பார்த்து பயிர் செய் 


🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 


🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்


🌝 மழையடி புஞ்சை

மதகடி நஞ்சை 


🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை


🌝 உழவில்லாத நிலமும் 

மிளகில்லாத கறியும் வழ வழ 


🌝 அகல உழவதை விட 

ஆழ உழுவது மேல் 


🌝 புஞ்சைக்கு நாலு உழவு 

நஞ்சைக்கு ஏழு உழவு 


🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை


🌝 ஆடு பயிர் காட்டும் 

ஆவாரை கதிர் கட்டும் 


🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 


🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 


🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 

நிலத்தில் மடிய வேண்டும்


🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்


🌝 தேங்கி கெட்டது நிலம் 

தேங்காமல் கெட்டது குளம்


🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 


🌝 சொத்தைப் போல் 

விதையை பேண வேண்டும்


🌝 விதை பாதி வேலை பாதி


🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 


🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு


🌝 கோப்பு தப்பினால் 

குப்பையும் பயிராகாது


🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 


🌝 கலக்க விதைத்தால்

களஞ்சியம் நிறையும்.

அடர விதைத்தால் போர் உயரும் 


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 

வாழ்க வளமுடன்! 

எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.


யாரையும் நம்பாதீர்கள்.


உழவே தலை.


தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.


கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி மரமும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடி பட

அப்போதுதான் உறைக்கும் - இனி

பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!


ஆறும் குளமும் மாசு அடைந்தால்

சோறும் நீறும் கிடைக்காது 


நீர் நிலைகளை காப்போம்.

இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. 

#VIVASAYAM 

#NAMMALVAR

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

யார் பெரியவர் ? வான் குருவியின் கூடு ! ஔவையார் பாடல்.

 ஔவையார் பாடல் - வான் குருவியின் கூடு ! 

சந்தி பிரித்து எழுதிய பாடல்

"வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்

தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால்  - யாம் பெரிதும்

வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !"


பொருளுரை:

வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை,   தேன்அடை,  சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய  புலனங்களே  !  ஆனால்  இந்த  அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா? 

AVVAIYAR


ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !


அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும்  இருக்கவே  செய்கின்றன  என்பதை இடித்துக் காட்டி,  வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற  உயிர்களிடத்தும் நாம் சமத்துவ   உணர்வு கொண்டிருக்க  வேண்டும்  என்பதை  எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !


‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !

"அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் பெரியவர்" 

பூமியில் படைக்கப்பட்ட எல்லோருக்கும் தனித்திறமை உண்டு என்று உத்வேகத்தோடு செயல்படு என்கிறார் நமது பாட்டி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...