வெள்ளி, 8 மார்ச், 2024

சேதுக்கரை - மராட்டியர்கள் போர்- ராணி முத்துத்திருவாயி நாச்சியார்

 சேதுக்கரை - மராட்டியர்கள் போர் :

"மகளிர் தினத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது."

ஐம்பதாயிரம் சிப்பாய்கள்..நான்காயிரம் குதிரை படை வீரர்கள் கொண்ட தஞ்சை மராட்டிய #துல்ஜாஜியின் படைகள் படையெடுத்து வருகிறார்கள்.. அதுவும் உளவு சொல்ல உள்நாட்டு சதிகாரர் மாப்பிள்ளைதேவர் மற்றும் அவன் தம்பி உதவியுடன் எதிரி படை வருகிறது..


நாட்டின் நிலைமையோ..


மன்னரை இழந்து வாடும் பனிரெண்டு வயதே ஆன மகன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராக..


தலைவன் இல்லாத நாடாக தத்தளிக்கிறது..


துல் ஜாஜியின் படைகள் முதலில் முதுவார் நத்தம் கோட்டையை தாக்குகிறது..


அவர்களை தடுத்து நிறுத்த தொன்னுற்று ஆறு மறவர்கள் உயிரை கொடுத்தனர்.. மறவர் படை ஆறுமுககோட்டைக்கு பின் வாங்குகிறது..


சுந்தர பாண்டியன் பட்டணம் (SP பட்டணம்).. ஓரியூர்.. கண்ணன்குடி..மங்களக்குடி.. கொண்ட வனந்தான்.. அனுமனந்தன்குடி போன்ற நிலைகளை எளிதில் வீழ்த்தி முன்னேறியது தஞ்சை படை..


அடுத்து ஆறுமுககோட்டை தான்.. இதை கைப்பற்றி விட்டால் இருபதே மைல் கல் தான் ராமநாதபுரம் அரணமனை.. அந்த கோட்டையும் 19.02.1771 ல் வீழ்ந்தது..


ஏழு ஆண்டுகளுக்கு முன் மறவர்களால் உதவி பெற்ற நவாப்பும் கூட எந்த உதவிக்கும் முன் வரவில்லை..


ராமநாதபுரம் கோட்டை முற்றுகையிடப்பட்டது..


நாற்பது நாட்கள் கோட்டை முற்றுகை..


ஒருவேளை கோட்டைக்குள் எதிரிகள் புகுந்தால் மறவர் பெண்கள் எதிரிகள் கைகளில் சிக்காமல் இருக்க கூட்டமாக  #சதி (#ஜவுகர்)எனபடும் தீபாய்தல் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது..(#பத்மாவதி படம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)..


ராணி இந்த இக்கட்டான சூழலில் நாட்டை காக்க ஒரு காரியம் செய்தார்.. ஆம்.. ராமநாதபுரம் அரண்மனையின் வடக்கே முற்றுகையிட்ட எதிரிகளின் பாசறையை ஒரே நாளில் தூள் தூளாக்கினார்.. எப்படி..?


ராமநாதபுரம் பெரிய கண்மாயில் முழுப்பெருக்கு ஏற்பட்டு நீர் காணப்பட்டது.. இதை தனது வீரர்களால் அதிகாலை பொழுதில் வெடி வைத்து தகர்த்தார்..இதில் எதிரி நாட்டு படையின் பல ஆயிரம் வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டனர்..(#பாகுபலி படம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)..


பெரும் படையை இழந்து வேறு வழி இல்லாமல் மராட்டிய மன்னன் #துல்ஜாஜி  சமாதானம் செய்து கொண்டு தன் நாடு நோக்கி திரும்பினான்..


மறவர் சீமையில் வீரம் என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல.. நாச்சியார்களுக்கும் தான்..


ராணி. #முத்து_திருவாயி_நாச்சியார்..


குறிப்பு : ராணி வேலுநாச்சியார்க்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிரிகளை ஓட விட்டவர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...